Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Agni natchathiram serial: காதலனைத் தேடி வர்றா.. இவன் காதலியைத் தேடி!
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் அகிலா, மீராவுக்குமான மோதல்தான் கதை. இருவரும் ஒரு தாய் வயிற்றில், அதாவது டிரைவரின் மனைவி வயிற்றில் பிறந்தவர்கள் என்பது இருவருக்குமே தெரியாது.
டிரைவரும் முதலாளியும் நெருங்கிய நண்பர்கள். முதலாளியின் மனைவியும், டிரைவரின் மனைவியும் ஒரே சமயத்தில் பிரசவிக்கிறார்கள். முதலாளிக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துருது.
டிரைவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்குது. இரண்டு பேர் மனைவிகளும் மயக்க நிலையில் இருக்கும்போது, ஒரு குழந்தையை முதலாளியிடம் கொடுத்துடறார் நண்பன் டிரைவர்.

மீரா அமைதி
டிரைவர் மனைவி வளர்த்த பெண் மீரா, மிக அமைதியான நல்ல பெண்ணாக வளர்கிறாள். பிறரின் கஷ்டம் தெரிந்து வாழ்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரி.இவளுக்கு எதிராகவே எப்போதும் நம்ம வீட்டில் வேலை செய்யும் டிரைவரின் மகள்தானேன்னு எகத்தாளமாக நடத்துவதே அகிலாவின் வேலை. தான் படிக்கும் கல்லூரியில் டிரைவரின் மகள் படிப்பதா என்கிற பொறாமையும் வேற. நான் படிச்சு நல்ல மார்க் வாங்கினால் நீ இந்த காலேஜை விட்டே போயிடணும்னு மீராவிடம் சவால் விடுகிறாள் அகிலா.

அடாவடி அகிலா
எப்போதும் தனது அப்பா டிரைவர் குடும்பத்தின் மேல்தான் கரிசனம் காமிக்கிறார் என்று கடும் கோபத்திலிருக்கா அகிலா. மீராவை அவமானப் படுத்துவது, மீராவின் அம்மாவை வீட்டு வேலைக்கு அழைத்து, அவரின் மேல் திருட்டு பட்டம் கட்டுவது என்று கதை ரொம்ப டென்சன் ஏத்தற மாதிரிதான் பயணிக்குது. காரில் போகும்போது வேணும்னே மீராவை டீஸ் பண்ணுவது, அவள் வாங்கி சென்ற ரேஷன் அரிசியை கொட்டுவது என்று படு அராஜகம்.

அகிலாவுக்கு பணிந்து
அப்பா ஏன் இப்படி அகிலாவுக்கு பணிந்து போகிறார் என்று மீராவுக்கு புரியவில்லை. அப்பாவிடம் கேட்டால், எல்லாம் நண்பனுக்காகத்தான் குட்டி. நீதான் கொஞ்சம் அவனுக்காக அடஜஸ்ட் பண்ணிக்கணும். அவன் நம்ம குடும்பத்து மேல உயிரையே வச்சிருக்கான். அவனுக்காக பொறுத்துக்கோ குட்டின்னு அப்பா சொல்றார்.

ஹரீஷ் கல்யாண் மாதிரி
ஹரீஷ் கல்யாண் மாதிரி இருக்கும்பையன் மேல இரு பெண்களுக்கு பாருங்க சொல்லி வச்ச மாதிரி ஒரே பையன் மேல லவ் வருது. அந்த பையன் நடிகர் ஹரிஷ் கல்யாண் மாதிரி இல்லேன்னாலும், அவர் சாயலில் ஸ்மார்ட்டா இருக்கான்.பேரு ஸ்ரீதர். ஸ்ரீதரின் அப்பா பெரும் தொழில் அதிபரா இருந்தாலும், பையனை வேலை கத்துக்க அகிலாவின் அப்பா கம்பெனிக்கு அனுப்பி வைக்கறார்.

காதல் வருந்து
அகிலாவுக்கு ஸ்ரீதர் மேல காதல் வருது.ஸ்ரீதருக்கு மீரா மேல காதல் வருது. இந்த காதலுக்கு அகிலா அம்மா பச்சைக் கொடி காட்டறாங்க. மீரா காதல் பற்றி மீரா அம்மாவுக்கு தெரியாது என்றாலும், ஸ்ரீதரை தெரியும். ஸ்ரீதருக்கு பிறந்த நாள். ஸ்ரீதர் மீராவை ராத்திரி பன்னிரண்டு மணிக்கு பார்க்கணும்னு சுவர் ஏறிக் குதிச்சு போக, இங்கே ஸ்ரீதரின் பிறந்த நாளன்னிக்கு சரியா பன்னிரண்டு மணிக்கு அவனை நேரில் போய் வாழத்தணும்னு இவ சுவரேறி குதிச்சு வந்து பார்த்தால், வெறும் பெட்டில் தலையணை போட்டு மூடி இருக்கு.
ஸ்ரீதர்தான் மீரா வீட்டிலிருக்கானே... அக்னி நட்சித்திர மோதல் எப்படி இருக்கு பாருங்க!