twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லஞ்ச் பாக்ஸ் கொடுமை…கோபிநாத்தின் நீயா நானா சுவாரசிய எபிசோடு பாத்தீங்களா?

    |

    சென்னை : விஜய்டிவியில் சீரியல்கள் ஒருபுறம் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பாகி வந்தாலும், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

    அந்த வகையில், விஜய் டிவியில் நீயா நானா பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாகும். இது தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனையாகும்.

    அதற்கு முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத்தின் கிடுக்குப்பிடியான கேள்வியும், அவரின் விவாதமும் ரசிக்கும் படியாக இருப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

    இனிமே இப்படித்தான்.. அடுத்த 10 நாளைக்கு ஏஆர் ரஹ்மான் என்ன செய்யப் போறாரு தெரியுமா? இனிமே இப்படித்தான்.. அடுத்த 10 நாளைக்கு ஏஆர் ரஹ்மான் என்ன செய்யப் போறாரு தெரியுமா?

    அம்மா, குட்டீஸ்

    அம்மா, குட்டீஸ்

    சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள், சாப்பிட கட்டாயப்படுத்தும் அம்மாக்கள் என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை இன்று நடத்தி இருந்தார் கோபிநாத். அதில், அம்மாக்கள் ஒரு டீம், குட்டீஸ் ஒரு டீம் இதில், அம்மாக்கள் தினமும் பள்ளிக்கு கொடுக்கும் உணவு குறித்து கலகலப்பாக பேசினார். இதில், ஒரு குட்டி பாப்பா ஸ்கூலுக்கு வெரைட்டியா செய்து தரேனு சொல்லிட்டு தினமும், தயிர் சாதம்,உருளைக்கிழக்கு தான் தராங்க என்று கொஞ்சும் மழழை மொழியில் பேசினார்.

    உருளைக்கிழங்கா?

    உருளைக்கிழங்கா?

    இன்னோரு, குட்டிக்கு தனது மழலைப் பேச்சே மாறவில்லை, அதற்குள் சார், ஒரு நாள் பருப்பு சாதம் பிடிக்கும்னு தெரியாமல் சொல்லிட்டேன். அதனால தினமும் பருப்பு சாதம்,உருளைக்கிழங்கே எப்படி சாப்பிடுவது, உருளைக்கிழங்கை பார்த்தாலே கடுப்பா இருக்கு சார் என்று தனது அம்மா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அது மட்டும் இல்லாமல் தினமும் காலையில் தோசை என்று கூறி "எங்கள் வீட்டில் எல்லா நாளும் தோசை லா...லா...என்று க்யூட்டாக பாட்டு பாடிவிட்டார்.

    லஞ்ச் பாக்ஸ் கொடுமை

    லஞ்ச் பாக்ஸ் கொடுமை

    அந்த காலத்தில் லஞ்ச பாக்சே மூன்று அடுக்கு இருக்கும் ஒன்றில் சாதம், ஒன்றில் குழம்பு மற்றொன்றில் பொறியல் இருக்கும் அதையே ரசித்து ருசித்து நண்பர்களுடன் சண்டை போட்டு பகிர்ந்து மிச்சம் வைக்காமல் சாப்பிடுவோம். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகள் எதை கொடுத்தாலும் சாப்பிடுவது இல்லை, எப்போதும் வாய்க்கு ருசியாக உணவையே கேட்கின்றனர். அதேபோல, பல அம்மாக்களுக்கு அதிரசம், முறுக்கு, கொழுக்கட்டை போன்ற எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய தெரியவில்லை என கோபிநாத் கூறினார்

    கொடுமைப்படுத்தாதீர்கள்

    கொடுமைப்படுத்தாதீர்கள்

    கல்லைத்திண்றாலும் கரையுற வயதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக உணவை கொடுப்பதாக நினைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு உணவை திணிக்கிறார்கள் என்றார் குழந்தை நல மருத்துவர் அருண்குமார். அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவையும் கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டாம். ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே தனியாக ஒரு தட்டில் உணவை போட்டுக்கொடுத்து சாப்பிட பழக்குங்கள். அப்போதுதான் அவர்கள் உணவு சாப்பிடும் முறையை கற்றுக்கொள்வார்கள். மேலும், அது நல்லது இது நல்லது என்று கூறி குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்கள் என்றார். உண்மையில் இந்த நிகழ்ச்சி பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

    English summary
    Neeya Naana Nutritious Lunch and Children -Join the heated debate between children who refuse to eat their lunchbox
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X