கும்தாஜ், பாபிலோனா, ரம்யாவுடன் குத்தாட்டம் போட்டு செல்பி எடுத்த மா.கா.பா ஆனந்த்
விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக குத்தாட்ட நடிகைகள் கும்தாஜ், பாபிலோனா, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தவாரம் நிகழ்ச்சி கூடுதல் கிக் உடன் சுவாரஸ்யமாகவே இருந்தது. காரணம் நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்தைப் பார்த்து குத்தாட்ட நடிகைகள் பாடல்கள் பாடியதோடு குத்தாட்டமும் போட்டனர்.

நான் ஆளான தாமரை
இதுநாள் வரை கும்தாஜ் குத்தாட்டம்தான் போடுவார் என்று நினைத்திருந்தோம் ஆனால் அது இது நிகழ்ச்சியில் அவர், நான் ஆளான தாமரை என்று கிக் குரலில் மா.கா.பாவை பார்த்து பாட வெட்கத்தில் நெளிந்தார் அவர்.

வசீகரா பாடிய கும்தாஜ்
அதை விட பிரமாதமாக வசீகரிக்கும் குரலில் வசீகரா என்று பாடி அசத்தினார் பாபிலோனா.

செல்பி புள்ள
பாடி முடித்தாகிவிட்டது அடுத்தது ஆட்டம்தான் ரெடி என்று ஆனந்த் கூப்பிட்ட உடன் டேக் எ செல்பி புள்ள பாடலுக்கு மூவரும் ஆட்டம் என்ற பெயரில் குத்தாடினர்.

நிஜ செல்பி
அப்போது அவர்களுடன் நிஜமாகவே செல்பி எடுத்தார் மா.கா.பா ஆனந்த். கடைசியில் வழக்கமான சங்கதிகளுடன் படு சுவாரஸ்யமாகவே முடிந்தது இந்த வாரம் அது இது எது.


Click it and Unblock the Notifications











