For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.பா.க ஆனந்த்

  By Mayura Akilan
  |

  வாய் ஓயாமல் பேச்சு, நக்கல், நையாண்டி என நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை ஒரு வழி செய்துவிடுவார். சூப்பர் சிங்கரோ, அது இது எதுவோ அனைத்திலும் லொட லொட என்று பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விடுவார்.

  சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த மா.கா.பா ஆனந்த் விரைவில் பெரிய திரையில் வலம் வர இருக்கிறார். விஜய் டிவியில் இருந்து வந்த சரவணன் மீனாட்சி செந்தில், சிவகார்த்திக்கேயன் வரிசையில் மா.கா.பா ஆனந்தும் இடம் பெறுவார் என்கின்றனர் அவரது நடிப்பை பார்த்தவர்கள்.

  எப்.எம், சின்னத்திரை, சினிமா என ரவுண்ட் கட்டி அடிக்கும் மாபாகாவை மழை பெய்யும் மாலை நேரத்தில் செல்போனில் பிடித்தோம். தன்னுடைய பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

  விளம்பரத்துறை வேலை

  விளம்பரத்துறை வேலை

  சொந்த ஊர் பாண்டிச்சேரி. அங்கேயே எம்.பி.ஏ முடிச்சுட்டு, எப்படியாவது அட்வர்டைஸிங் துறையில காப்பி ரைட்டர் ஆகிடணும்னுதான் சென்னைக்கு வந்தேன். காப்பி ஆத்துற வேலை வரைக்கும்தான் எட்ட முடிஞ்சுது.

  பேச்சுதான் என் பலம்

  பேச்சுதான் என் பலம்

  ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'நீதான் லொடலொடனு பேசிக்கிட்டே இருக்கியே. ஆர்.ஜே ஆயிடேன்!'னு சொன்னாங்க. அங்கதான் என்னோட கலைப்பயணம் தொடங்கிச்சு!

  பேரு வச்ச செந்தில்

  பேரு வச்ச செந்தில்

  'சரவணன் மீனாட்சி' மிர்ச்சி செந்தில் எனக்கு மா.கா.பா. ஆனந்த்னு பேரு வச்சாரு. சூரியன் எஃப்.எம்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்த அனுபவத்தோட மிர்ச்சி எஃப்.எம்-க்கு வந்தப்போ, நிகழ்ச்சி ஹெட் செந்தில். அவர்தான், 'வெறும் ஆனந்த் வேண்டாம். ஒரு ரைமிங்கா இருக்கட்டும்... அப்படின்னு பேருக்கு முன்னாடி மா.கா.பா-வை சேர்த்து விட்டார்.

  போட்டோகிராபி பிடிக்கம்

  போட்டோகிராபி பிடிக்கம்

  எனக்கு போட்டோகிராபி பிடிக்கும். முறையா கத்துக்கலை. ஆனாலும் நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன். ரேடியோ ஜாக்கி, டிவி தொகுப்பாளர், சினிமா என வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது.

  நான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.கா.பா ஆனந்த்

  நான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.கா.பா ஆனந்த்

  எல்லோரும் என்னைய சின்னப்பையன்னு நினைச்சிக்கிறாங்க. எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சு. கோயம்புத்தூர்ல ஆர்.ஜே-வா வேலையில் இருந்தப்போவே சூசனை காதல் திருமணம் செய்துகிட்டேன். அஞ்சு வயசுல ஒரு பொண்ணும், ஒரு வயதை தொடப்போற பையனும் இருக்காங்க!.

  வெள்ளித்திரையில் மா.பா.கா

  வெள்ளித்திரையில் மா.பா.கா

  'வானவராயன் வல்லவராயன்' படத்தில் நான்தான் 'வல்லவராயன்'. பாடல்கள் ஷூட் தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. சின்னத்திரையில் ரசித்தவர்கள் வெள்ளித்திரையிலும் என்னை கண்டு ரசிக்கலாம் என்று கூறி சிரித்தவருக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

  English summary
  Popular VJ Ma Ka Pa Anand is shuttling between TV shows and film shoots these days. He is teaming up with actor Kreshna for Vanavarayan and Vallavarayan, where he plays the second lead in this story of two brothers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X