சிங்கப்பூரில் மானாட மயிலாட 9: சிவகார்த்திக்கேயன் பங்கேற்பு
மானட மயிலாட சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகார்த்திக்கேயன் பங்கேற்கிறார்.
சின்னத்திரை கலைஞர்களுக்குள் ஒளிந்திருக்கும் நடனத் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி 'மானாட மயிலாட. கலைஞர் டிவியில் ' 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 9-வது சீஸனின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
சிங்கப்பூரில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களும், சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.

மானாட மயிலாட
திரைப்பட நடன இயக்குநர் கலா தயாரித்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது மானாட மயிலாட நடன ரியாலிட்டி நிகழ்ச்சி.

நமீதா, குஷ்பு
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா, நமீதா, குஷ்பு ஆகியோர் பங்கேற்கு போட்டியாளர்களுக்கு மதிப்பெண்களை போடுகின்றனர்.

சிங்கப்பூரில் இறுதிப்போட்டி
சென்னை ஸ்டூடியோவில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இறுதிப்போட்டிகள் பிரம்மாண்ட அரங்குகளில் நடைபெறுவது வழங்கம். அபுதாபி, கோலாலம்பூர், லண்டன் என மானாட மயிலாட இறுதிப்போட்டி நடைபெற்றுள்ளது. சீசன் 9 இறுதிப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

சிவகார்த்திக்கேயன்
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் சிவகார்த்திக்கேயன், மிர்ச்சி சிவா, விமல், விவேக், ஜெயராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நடிகை கோவை சரளாவும் நிகழ்சியில் பங்கேற்க சிங்கப்பூர் போகிறார். நண்டு ஜெகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications











