Naam Iruvar Namaku Iruvar Serial: மாயன் கெட்டப்...சினிமாவுக்கு கூட இப்படி சிந்திக்கலையே!

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஆர்.ஜெ.செந்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு அல்வா சாப்பிடற மாதிரியாக மாயன் ரோல் இருக்கு..வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திகிட்டு நடிக்கிறார்.

மாயன் என்று ரவுடி இல்லை ஆனா, ரவுடின்னு உதார் விட்டுகிட்டு திரியற மாதிரியான ஒரு ரோல். டாகடர் அரவிந்த் என்று டீசண்டா இன்னொரு ரோல். மாயன் பெத்தவங்ககிட்டயும்,அரவிந்த் அப்பாவின் நண்பரிடமும் வளர்க்கிறார்கள்.

செந்தில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு விஜய் டிவி சீரியல்கள் ஹிட் கொடுத்தவர். விஜய் டிவி தவிர எந்த சேனல்களிலும் துவரை இவர் தலை காட்டியதில்லை.

நடிகர் செந்தில்

நடிகர் செந்தில்

ஆர்.ஜெ செந்தில் குரல் கேட்டு, அவரின் நண்பர் மூலமாக விஜய் டிவியில் மதுர சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் செந்திலுக்கு ஜோடியாக நடித்தவர் மனைவி ஸ்ரீஜாதான். சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்., இந்த ஜோடியும் சூப்பர் டூப்பர் ஹிட். அப்போது செந்தில் புகழப்பட்டதே அவர் பேசிய மதுரை பாஷைக்காகத்தான்.

மீண்டும் இதே ஜோடி

மீண்டும் இதே ஜோடி

விஜய் டிவியின் இன்னொரு சூப்பர் ஹிட் சீரியல் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சிதான். அதிலும் செந்தில் ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடிக்க சீரியல் செம ஹிட். பிறகு இருவருக்கும் கல்யாணமாகி சிறிது காலம் விஜய் டிவி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் நடிக்க இவர்களை கூப்பிட்டு, இவர்கள் மறுத்ததுதான் வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு காரணம்.

இதிலும் இருவரும்

இதிலும் இருவரும்

திருமணத்துக்கு பிறகு மாப்பிள்ளை என்று ஒரு சீரியல். அதிலும் இவர்களிருவரும் ஜோடியாக நடிக்க, அது ஒர்க் அவுட் ஆகவில்லை.சீரியல் அட்டர் பிளாப். உடனடியாக சீரியலை நிறுத்தியும் ஆச்சு. இருவருக்கும் பொருத்தமான கதையாக அது அமையவில்லை.பிறகு அடிச்சுது செந்திலுக்கு சான்ஸ். அதுதான் இப்போது இவர் நடித்து கொண்டு இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.

பெரிதாக இல்லை

பெரிதாக இல்லை

கதை ஒன்றும் பெரியதாக இல்லை என்றாலும், செந்தில் இரு வேடமிட்டு, இரண்டையும் வேறு படுத்தி காமிச்சு இருக்கார். சீரியல் முழுக்க ஒண்ணு மயனாக செந்தில் வருவார். இல்லை அரவிந்தாக செந்தில் வருவார். அதுவும் மாயனாக வரும் செந்தில் நடிப்பில், நகைச்சுவையில், கெட்டப்பில் அசத்தறார்.

நல்ல ஐடியா

நல்ல ஐடியா

இரட்டை கலரில் வேட்டி, அதிலுள்ளே இருக்கும் கலர் தெரியும்படி வேட்டியின் நுனியை கையில் பிடித்து இருப்பது. ரெண்டு காலர் வச்சு டி ஷர்ட், கண்ணில் ஒரு கூலிங் கிளாஸ் சட்டையில் ஒரு கூலிங் கிளாஸ்.இதுதான் அவர் கெட்டப். இதை வச்சுக்கிட்டு மதுரைக்காரனா அவர் பேசறது, நடந்துக்கறது, அலப்பறை காட்டறது, நக்கல் அடிக்கறதுன்னு சும்மா கலக்கி இருக்கார்.இரட்டை வேடத்தில் நல்லா வித்தியாசம் காமிக்கறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X