கொழுந்தியா இல்லையேனு மாதம்பட்டி ரங்கராஜ் விசனம்.. மாமனாரைச் சொல்லணும்.. இப்படி இறங்கிட்டாரே

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று, குக் வித் கோமாளி. இதன் 7ஆவது சீசன் வழக்கமான கோலாகலத்துடன் தொடங்கி உள்ளது. இந்த சீசனின் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் நிகழ்ச்சியைப் பார்த்தால், முழுக்க முழுக்க வெடித்துச் சிரிக்கும் அளவுக்கு தரமான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தரப்பில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் ஒரு புரோமோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும், மறுபுறம் விமர்சனத்தையும் எதிர் கொண்டுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான மஞ்சுநாதனும் அவரது மனைவியும் சமைத்துக் கொண்டு இருக்கையில் அவர்களிடத்தில் சென்று பேச்சுக் கொடுத்தார்.

அப்போது, நான் இப்படி சமைப்பது எல்லாம் உங்க அக்காவுக்குத்தானே ( தன்னுடைய மனைவியைச் சொல்லுகிறார்) என்னுடைய மாமனார் தான் என்னுடைய மனைவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவிட்டாரே. எனக்கு ஒரு கொழுந்தியாவே இல்லை மாதம்பட்டி என்று வருத்தத்துடன் கூறினார். உடனே இதைக் கேட்ட மஞ்சுநாதனின் மனைவி, கடைசி மகளை திருமணம் செய்துவிட்டு, கொளுந்தியா இல்லை என்று வருத்தப்பட்டால் எப்படி? என்று கேட்கிறார்.

Madampatty Rangaraj s No Sister-in-law comment in Cooku with Comali 7 triggers controversy Netizens slam

கொழுந்தியா இல்லாத வீடு: அடுத்து பேசிய மஞ்சுநாதன், எனது மனைவிக்கு இரண்டு அக்கா இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் எனக்கு அண்ணி, ஒரு தாயைப் போல. இதுவே கொழுந்தியா இருந்திருந்தால், அந்த உறவே வேறு என்று கூறினார். கொழுந்தியா இல்லாத வீட்டில் பொண்ணு கட்டுவது என்பது சிக்கன் பிரியாணியில் பீஸ் இல்லாததைப் போல என்று கூறுகிறார்.

வருத்தம்: இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த மாதமபட்டி ரங்கராஜோ, எனக்கும் கொழுந்தியா இல்லை அண்ணா, என்று வருத்தத்தோடு கூற, உடனே மஞ்சுநாதனோ, உன்னுடைய மாமனாரும் ஆர்வம் காட்டவில்லை போல" என்று கூறுகிறார். இந்த புரோமோ ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமர்சனம்: அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலரும் இது 18+ காமெடி, இது போன்ற காமெடிகளால் தான் விஜய் தொலைக்காட்சியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மதிப்பை இழந்து கொண்டு உள்ளன" என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X