Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 11 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட்நியூஸ் சொன்ன கமல், கதறிக் கதறி அழுத மதுமிதா: கடுப்பான வனிதா, சாக்ஷி
சென்னை: கமல் ஹாஸன் முன்பு மதுமிதா கதறி அழுததை பார்த்த வனிதாவும், சாக்ஷியும் செம கடுப்பானார்கள்.
வார இறுதி நாட்கள் வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்கள் அழகாக உடை அணிவார். மேலும் கமல் ஹாஸனை பார்க்க போட்டியாளர்களும், பார்வையாளர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.
கமலுக்கு முன்பு மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் போன்று இருப்பது வழக்கமாகிவிட்டது.

குசும்பு நாயகன்
உலக நாயகன் சரியான குசும்பு நாயகனாக உள்ளார். மதுமிதாவுக்கும், ஷெரினுக்கும் ஆகவே ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஷெரினை பாராட்டி பேசுமாறு மதுமிதாவிடம் கூறினார். அவரும், ஷெரின் அழகானவர், முடி ரொம்ப அழகாக இருக்கும். கிளீன் பண்ணுவதில் அவரை மிஞ்ச உலகத்தில் ஆள் இல்லை. யார் என்ன சொல்கிறார் என்பதை காதில் வாங்காமல் காட்டு கத்தல் கத்தும் கேரக்டர் என்று தெரிவித்தார்.

மதுமிதா
ஷெரின் உடைகள் அணிவதில் நளினம் இருக்கும். சுத்தத் தமிழில் அழகாக பேசுவார். கத்துவது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் இந்தி, ஆங்கிலத்தில் பேசுவார். மற்றவர்களுக்கு புரிகிறதா, இல்லையா என்பதை கண்டுகொள்வது இல்லை. அவரின் ஹேர் கலர் நன்றாக உள்ளது. அடிக்கடி ஐ லவ் யூ பிக் பாஸ் என்று கூறுகிறார். அது என்ன பிக் பாஸை மட்டும் லவ் பண்ணுவது. இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றார் மதுமிதா.

மக்கள்
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று வாக்களித்தனர். இந்நிலையில் மக்கள் மதுமிதாவை காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் என்று கமல் ஹாஸன் தெரிவித்ததை கேட்ட மது கதறி அழத் துவங்கிவிட்டார். மது கதறி அழுததை பார்த்த சாக்ஷியும், வனிதாவும் இந்த நடிப்பை எல்லாம் நாங்க தங்கப் பதக்கத்திலேயே பார்த்துவிட்டோம் என்பது போன்று லுக் விட்டனர்.
சித்தப்பு சரவணனோ போதும் போதும்மா என்று கடுப்பில் சொன்னார்.
— Biggboss (@Biggbos05269641) July 7, 2019 |
நெட்டிசன்கள்
மதுமிதா குமுறிக் குமுறி அழுததை பார்த்த நெட்டிசன்களுக்கு ஃபீல் ஆகவில்லை. மாறாக அவரை பற்றி மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். மதுமிதா அழுதது செயற்கையாக இருந்ததாக சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களும் நினைக்கிறார்கள். அந்த பெண்ணை விரட்டுவதிலேயே சக போட்டியாளர்கள் குறியாக உள்ளனர். அதனால் மக்கள் அவரை காப்பாற்றியதை அறிந்து நிம்மதியில் அழுதிருப்பார்.