வியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன?: வைரல் ஃபேஸ்புக் பதிவு

By Siva

சென்னை:பிக் பாஸ் 3 வீட்டில் மதுமிதா தொடர்பாக என்ன நடந்தது என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் 3 வீட்டில் நடந்த விவாதத்தின்போது தனது நிலையை நிரூபிக்க மதுமிதா தனது கையை அறுக்க அவர் முக்கிய விதியை மீறிவிட்டதாகக் கூறி நேற்று வெளியேற்றப்பட்டார்.

மது கையை அறுத்த சம்பவத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் 3 எடிட்டிங் குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாக ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு பதிவு வைரலாகியுள்ளது. அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

டாஸ்க்

டாஸ்க்

ஹலோ ஆப் டாஸ்கில் மது, வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் போல..கொஞ்சம் கருணை காட்டி தமிழகத்திற்கு மழை வர வழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட ஷெரின், இங்க எதுக்கு கர்நாடகா, தமிழ்நாடு பிரச்சனைகளை கொண்டு வருகிறீங்க, இங்க நானும் இருக்கேன்னு சொல்லியிருக்கிறார்.

மதுமிதா

மதுமிதா

மதுமிதா வழக்கம் போன்று நான் சொன்னது தான் சரி என்று விவாதம் செய்துள்ளார். உடனே பிக் பாஸ் குறுக்கிட்டு இந்த டாபிக்கை ஒளிபரப்ப முடியாது, இதை உங்களின் ஹலோ ஆப் பக்கத்திலும் போட முடியாது. அதனால் உங்களின் கருத்தை மாற்றவும் என்று கூற அவரோ முடியாது என்று அடம் பிடித்துள்ளார்.

சேரன்

சேரன்

கருத்தை மாற்றுமாறு சேரன் உள்ளிட்ட அனைவரும் மதுவிடம் விவாதம் செய்துள்ளனர். ஆனால் அவரோ வழக்கம் போன்று தேவையில்லாததை எல்லாம் பேசி பதிலுக்கு விவாதம் செய்துள்ளார். கேப்டனாக இருக்கும் நீங்கள் ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் நினைக்க வேண்டும் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். நீங்க இப்படி பண்ணினா எங்களுக்கு எப்படி கேப்டனாக இருக்க முடியும் என்று கேட்டுள்ளனர்.

ஷெரின்

ஷெரின்

மதுமிதா இங்கு இருந்தால் நான் கிளம்புகிறேன் என்று ஷெரின் தெரிவித்துள்ளார். சும்மா இங்க வந்துட்டு உனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்க வேண்டாம், ஓட்டுக்காக இப்படி பண்ணுற என்று வனிதா மதுமிதாவிடம் விவாதம் செய்துள்ளார். ஆளாளுக்கு தன்னிடம் விவாதம் செய்யவே தான் கூறியது சரி என்பதை நிரூபிக்க கையை கட் பண்ணி ரத்தத்தை காட்டி இவ்வளவு அக்கறை இருக்கு என்று சொல்லியுள்ளார் மது.

நாடகம்

மது தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை, தான் பேசியது சரி என்பதை நிரூபிக்க அப்படி செய்துள்ளார். மது வழக்கம் போன்று தேவையில்லாததை பேசி, பிக் பாஸ் சொல்லியும் மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்து டிராமா போட்டு தன் கருத்தை நிரூபிக்கிறேன்னு பண்ணிருக்காங்க. தன்னைத் தானே காயப்படுத்தியதால் அவரை பிக் பாஸ் வெளியேற்றிவிட்டார். இது மதுவின் தவறு, யாரையும் குறை சொல்ல முடியாது. இது மதுவின் முட்டாள்தனம் என்று அந்த ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X