தனியா பேசுற அளவுக்கு நேத்து நடந்த மேட்டர் வொர்த் இல்லம்மா..! இப்படி இருந்தா தாக்கு பிடிக்க முடியாது!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கார் நடிகை மதுமிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா, அபிராமியின் முகம் சுளிக்க வைக்கும் சில செயல்பாடுகளை கமலின் முன்பு சொல்ல வேண்டாம் என ஃபாத்திமா பாபுவிடம் நேற்று கூறினார். ஆனால் ஃபாத்திமா பாபு மறந்துபோய் அதனை கூறிவிட்டார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழ் பெண் என எதற்காகவோ சொல்ல போய் அது வேறு மாதிரி போய் முடிந்துவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் மதுமிதா தமிழ்பெண் என கூறி ஓட்டு வாங்க பார்க்கிறார் என கொண்டுவந்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

மதுவிடம் சண்டை
ஆனால் மதுமிதா, அபிராமியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அப்படி செய்தார். இதுபுரியாமல் கவின், வனிதா, ஷெரின், சாக்ஷி, மதுமிதா என அனைவரும் அவரிடம் சண்டை போட்டனர்.

தனியாக பேசி வருகிறார்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா. நேற்று முதல் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வருகிறார். அவ்வப்போது தனியாக பேசி வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
அவ்ளோ வொர்த் இல்லை
மதுமிதா அமைதியா இரும்மா.. இந்த லெவலுக்கு இப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னம்மா நீ.. இப்படியே பேசிட்டு இருந்தா ரொம்ப நாள் உள்ள தாக்குபிடிக்க முடியாது.. தனியா பேசுற லெவல் வரை போறதுக்கு நேத்து நடந்த இன்சிடன்ட் அவ்ளோ வொர்த் இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்.
கடைசில இப்படி ஆயிட்டியேமா
மதுமிதா கடைசில இப்படி ஆயிட்டியேமா.. நோக்கியா ஸ்ட்ராட்டர்ஜி என்கிறார் இவர்.
கவின் தான் கத்துவாரா?
மதுமிதா லூஸ் டாக்கை சான்ஸ்ஸா எடுத்துக்கிட்டு எல்லாம் நல்லா குழம்பிய குட்டையில் மீன் பிடிக்குதுங்க. இதே பிரச்சனை மீராவுக்கு வந்தா வனிதாம்மா வாய தொறக்குமா, இல்ல ஷெரின் தான் செம்பு தூக்குமா,இல்ல சாக்ஷி தான் சப்போட்டுக்கு வருமா,இல்ல மைனர் குஞ்சு கவின் தான் கத்துவாரா? என்கிறார் இவர்.
மென்ட்டல் ஆக்கிட்டீங்க
என்னடா அந்த பொண்ண மென்ட்டல் ஆக்கிட்டீங்க... பாவம் டா.. என்கிறார் இந்த நெட்டிசன்
லூஸ் ஆயிடுச்சு
தமிழ் பொண்ணு லூஸ் ஆயிடுச்சு.. என்று கூறுகிறார் இவர்.
சதிவலையில் சிக்கிய மது
பாத்திமா பாபு பின்னிய சதி வலையில் சிக்கித்தவிக்கும் மதுமிதா. பாத்திமா மேடம் மட்டும் அந்த பாட்டில் குழந்தை விஷயத்தைச் செய்தில சொல்லலனா மதுமிதா பயந்து போய் சுய பாதுகாப்பு மோடை ஆன் பண்ணியிருக்காது. என்கிறார் இந்த நெட்டிசன்
அனைத்தையும் மறந்துடுங்க
மது மீண்டும் பழையபடி ராக் பண்ணுங்க.. மற்ற அனைத்தையும் மறந்துடுங்க.. இதுதான் விளையாட்டின் திட்டம்.. என்கிறார் இவர்.
மூஞ்சியை கீறிடும்மா
மதுமிதா சப்போஸ் உன்னைய வெளியே அனுப்பினாங்கன்னா.. வெளிய போறதுக்கு முன்னாடி எல்லார் மூஞ்சியையும் கீறீ வச்சிட்டு வந்துடுமா.. என கேட்கிறார் இவர்.
என்னடா சோதனை
என்னடா மதுவுக்கு வந்த சோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











