கிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்

By Siva

சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல் ஹாஸன் அருகே நின்று கொண்டு சக போட்டியாளர்களுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார் மதுமிதா.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த மதுமிதா விவாதத்தின்போது தனது கருத்தை நிரூபிக்க தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து முக்கிய விதியை மீறியதாகக் கூறி மதுமிதாவை நேற்று வெளியேற்றிவிட்டார் பிக் பாஸ்.

அதன் பிறகு மேடைக்கு வந்த மதுமிதாவிடம் கிளம்பு முன்பு வீட்டில் உள்ளவர்களுடன் பேசுகிறீர்களா என்று கமல் கேட்க சரி என்றார்.

மது

மது

அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களை பார்த்த மதுமிதா சேரன் சார் என்று கூற அவர் வணக்கம் வைக்க, நம்ம கஸ்தூரி அக்கா மது என்று அதிர்ச்சியில் அழைத்தார். சேரன் சாரையும், கஸ்தூரி மேடத்தையும் தவிர இந்த வீட்டில் இருக்கும் எந்த முகங்களையும் பார்க்க நான் விரும்பவில்லை என்று தெளிவாக கூறினார் மதுமிதா.

ஷெரின்

ஷெரின்

கமல் அருகே நின்று கொண்டு மதுமிதா இப்படி பேசுவார் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை போன்று. ஷெரின், அபிராமி உள்ளிட்டோர் நக்கலான அதே சமயம் அசிங்கப்பட்டுவிட்டோமே என்பது போன்று முகபாவனை கொடுத்தார்கள். எப்படி இருக்கீங்க என்று மதுமிதா சேரன், கஸ்தூரியிடம் கேட்டார்.

வருத்தம்

வருத்தம்

மற்றவர்களை பார்க்க மாட்டேன் என்று சொன்ன மதுமிதாவிடம் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார் சேரன். அதற்கு மதுவோ, அப்படித் தான் சொல்வேன் என்றார். சேரன் சார், உங்கள் போராட்டம் தொடர வேண்டும், தவறுகள் தட்டிக் கேட்கப்பட வேண்டும் என்றார். மதுமிதா வெளியேறியதால் சேரன், கஸ்தூரி முகத்தில் மட்டும் தான் வருத்தம் தெரிந்தது. மற்றவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு என்ன என்பது போன்று இருந்தார்கள்.

கஸ்தூரி

கஸ்தூரி

சரியான நேரத்தில் பேசும் வார்த்தைகளும், உங்களின் மொக்கை ஜோக்குகளும் கண்டிப்பா செம ஸ்டிராங்காக இருக்கும் என்று மது கஸ்தூரியை பார்த்து கூறினார். மேலும், என்னை பொறுத்தவரை வெற்றி பெற தகுதியான இரண்டு நபர்கள் நீங்கள் மட்டும் தான் என்று மது கஸ்தூரி, சேரனை பார்த்து கூற ஷெரின் கடுப்பாகி முறைத்தார். மது, நீங்கள் எடுத்த முடிவு தவறானது, நம் நிலையை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றால் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைக்கக் கூடாது என்று சேரன் தெரிவிக்க பார்வையாளர்கள் கை தட்டி பாராட்டினார்கள். மது பேசப் பேச லாஸ்லியா, கவின், சாண்டி முகம் எல்லாம் ஒரு மாதிரியாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X