இது ரொம்ப தவறு.. சரியான விளக்கத்த கொடுக்கனும்.. விஜய் டிவிக்கு மதுமிதாவின் கணவர் கிடுக்கிப்பிடி!

Recommended Video

இது ரொம்ப தவறு.. சரியான விளக்கத்த கொடுக்கனும்.. விஜய் டிவிக்கு மதுமிதாவின் கணவர் கிடுக்கிப்பிடி!

சென்னை: பிக்பாஸ் ஃபைனலில் பங்கேற்காத போது தன்னுடைய காட்சியை பயன்படுத்திய விஜய் டிவி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மதுமிதாவின் கணவர் மோசஸ் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாள் முதல் சர்ச்சையாக இருந்தது.

தற்போது நிகழ்ச்சி முடிந்த பிறகும சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெற்ற மதுமிதாசக போட்டியாளர்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்று நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

மதுமிதா

மதுமிதா

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மதுமிதா மீதே புகார் அளித்தது விஜய் டிவி நிர்வாகம். தன் மீதான புகாரை பொய் என்று கூறிய மிதுமிதா விஜய் டிவி மீதும் கமல்ஹாசன் மீதும் புகார் அளித்தார்.

அழைப்பில்லை

அழைப்பில்லை

இதனால் விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் பினாலேவின் போதும் மதுமிதாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொலைக்காட்சி சேனல் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

பங்ககேற்கல

பங்ககேற்கல

இந்நிலையில் இதுதொடர்பாக மதுமிதாவின் கணவர் மோசஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் ஃபைனலில் தானோ மதுமிதாவோ அல்லது தங்களின் குடும்பத்தை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் எங்களை அவர்கள் இன்வைட் பண்ணல.

விளக்கம் கொடுக்க வேண்டும்

ஆனால் சமீபமா ஒரு செய்தி பரவி வருகிறது. நானும் பார்த்தேன், அதில் நான் பங்கேற்றதாக போடப்பட்டுள்ளது. இதனால் பலரும் நான் பங்கேற்றதாக நினைத்து பேசுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. இது பெரிய தவறு. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மோசஸ் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay tv cheating video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X