த்தூ.. கருமாந்திரம்.. அடுத்தவங்க அழறது பார்த்து சிரிக்கிறவன் ஆம்பளையா? உச்சபட்ச கோபத்தில் மதுமிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கூலாக இருந்த நடிகை மதுமிதா நேற்று எரிமலையாக வெடித்து சிதறினார்.
பிக்பாஸ் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை கொடுத்துள்ளார். இந்த டாஸ்க் நேற்று முன்தினம் முதல் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்காக பிக்பாஸ் வீடு பாம்பு பட்டி, கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. ஒரு கிராமத்திற்கு சேரன் ஊர் தலைவராகவும் மற்றொரு கிராமத்திற்கு மதுமிதா ஊர்தலைவராகவும் உள்ளனர்.

கிராமத்தினருக்கு டாஸ்க்
ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் கிராம மக்களாக மாறியுள்ளனர்.
ஒரு கிராமத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது பாத்ரூம் இதனை பயன்படுத்த மற்றொரு கிராமத்தினருக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. மற்றொரு கிராமத்தினரும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிச்சனை பயன்படுத்த டாஸ்க் கொடுக்கின்றனர்.

முகத்தில் பேஸ்ட்டை தடவி
நேற்றைய எபிசோடில் மதுமிதா பாத்ரூம் செல்வதற்காக கையில் பானையுடன் வந்தார். அப்போது கவின், சாக்ஷி, சாண்டி ஆகியோர் மதுமிதா முகத்தில் பேஸ்ட்டை தடவ சொல்லி டான்ஸ் ஆட கூறினர்.

ஹெவியா ஆடிட்டு போங்க
மதுமிதா முகம் எரிகிறது என்று கூறியும் தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியும் சாண்டி மாரியம்மா பாடலுக்கு ஹெவியாக டான்ஸ் ஆட வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார். உடம்பு சரியில்லை என்று கூறிய பின்னரும் ஹெவியாக ஆடிவிட்டு போங்க என டாஸ்க் கொடுத்தனர்.

அழுவதை பார்த்து சிரித்த சாண்டி
அப்போது முகம் எரியுது என தவித்த மதுமிதாவை பார்த்த சாண்டி சிரித்தார். இதனால் உச்சபட்ச கோபமடைந்த மதுமிதா உடம்பு சரியில்லை என்று கூறியும் இப்படி டாஸ்க் கொடுக்கிறீர்கள், நானும் உங்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கிறேன் என்றார்.

ஆம்பளையா.. த்தூ.. கருமாந்திரம்
இதனால் சாண்டிக்கும் மதுமிதாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மதுமிதா, அடுத்தவங்க அழறது பார்த்து சிரிக்கிறவன் ஆம்பளையா.. த்தூ.. கருமாந்திரம் என்று கூறினார். சக ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை சமாதானம் செய்தனர்.

கூலாக வெறுப்பேற்றிய மது
கடந்த 30 நாட்களாக எப்படி கலாய்த்தாலும் பொறுமையாகவே கையாண்டார் மதுமிதா. வனிதா, சாக்ஷி, ஷெரின், அபிராமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து சண்டை போட்ட போது கூட மிகவும் கூலாக ஹேண்டில் செய்து அவர்களை வெறுப்பேற்றினார் மதுமிதா.

உயரத்தை கிண்டல்
அப்படிப்பட்ட மதுமிதா நேற்று எரிமலையாக சீறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரின் முக அமைப்பையும் அவரின் உயரத்தையும் சாண்டியும் கவினும் கிண்டல் செய்துள்ளனர். இதனை இதுநாள் வரை மனதில் போட்டு அழுத்தி வைத்திருந்தார் மதுமிதா. இந்நிலையில் நேற்று எல்லா மன அழுத்தமும் வெளியே வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











