ஃபைனல்ஸ்க்குதான் கூப்பிடல.. இதுக்காவது அழைத்திருக்கலாமே! ஆதங்கப்படும் ரசிகர்கள்!

Recommended Video

Bigg Boss Madhu viral video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கும் மதுமிதா மற்றும் சரவணனை அழைக்காதது அவர்களின் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் நடிகர் சரவணன், மதுமிதா மற்றும் மாடலான மீரா மிதுன்.

இதில் சரவணன் தனது கல்லூரி நாட்களில் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக கமல் பங்கேற்ற எபிசோடில் கூறினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கூறினார் பிக்பாஸ்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

ஆனால் சரவணன் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். இது சரவணன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இதனை தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார் நடிகை மதுமிதா. சக போட்டியாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்ற அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் பினாலே

பிக்பாஸ் பினாலே

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பினாலே நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது இதில் முகென் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாமிடத்தை சாண்டியும் மூன்றாமிடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

சர்ச்சையான

சர்ச்சையான

அந்த ஃபினாலே நிகழ்ச்சிக்கு கூட மதுமிதாவையும் சரவணனையும் நிகழ்ச்சி தயாரிப்பு குழு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் அந்நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் பங்கேற்றது போன்ற காட்சி ஒளிபரப்பப்பட்டதால் சர்ச்சையானது.

ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதிலும் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

நியாயமற்றவர்கள்

மதுமிதாவையும் சரவணனையும் அழைக்காதவரை பிக்பாஸ் முழுமையடையாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மதுமிதாவை மிஸ் செய்தோம். மதுமிதாவுக்கு அவர்கள் நியாயமற்றவர்களாக இருந்தனர். ஹவுஸ்மேட்ஸ் மதுமிதாவுக்கு என்ன மாதிரியான மனஉளைச்சலை கொடுத்தார்கள் என்று தெரியப்படுத்தவேயில்லை என தெரிவித்திருக்கிறார் இவர்.

மீராவுக்கும் அழைப்பில்லை

மீராவுக்கும் அழைப்பில்லை

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பேமென்ட் கொடுக்காததால் கடுப்பாகி வீடியோ வெளியிட்ட மீரா மிதுனையும் நிகழ்ச்சி குழு பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X