8 பேர் எப்படி ரேக்கிங் பண்ணுவாங்க? இது ட்ரெயிலர்தான்.. மெயின் பிக்சர் காட்டல! கலங்கும் மதுமிதா!
Recommended Video
சென்னை: 8 பேர் சேர்ந்து எப்படி ரேக்கிங் செய்வார்கள் என மதுமிதா பிக்பாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கலங்கியுள்ளார்.
விஜய் டிவியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் நடிகை மதுமிதா.
நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளையாடிய மதுமிதாவுக்கு ஃபைனல் வரை செல்லும் வாய்ப்பிருந்தது. ஆனால் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளான மதுமிதா அவர்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயற்சித்தார்.

போலீஸில் புகார்
இதனால் கைகளை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்த அவர், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை விஜய் டிவி நிர்வாகமும் கமல்ஹாசனும் கண்டிக்கவில்லை என்றார்.
இது வெறும் ட்ரெயிலர்
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர், 8 பேர் எப்படி ரேக்கிங் பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்பணம். இது ட்ரெயிலர் மட்டுமே . மெயின் பிக்சர் காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம் கண்களும் கண்ணீர் குளமாய் மாறும் என பதிவிட்டுள்ளார்.
கண்டியுங்கள்
மேலும் மற்றொரு பதிவில் ஒருவரை குறி வைத்து திட்டாதீர்கள் திட்டுகளை பகிருங்கள். முக்கியமானவர்களை விட்டுவிட்டீர்கள் vsksa மன்னிக்கவும் திட்டாதீர்கள் கண்டியுங்கள் கண்டனத்திற்கு மிக தகுதியானவர்கள் இவர்கள் vsksa. என பதிவிட்டிருக்கிறார்.
மதுமிதா விளக்கம்
மற்றொரு டிவிட்டில், vsksa என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் மதுமிதா, வனிதா ஷெரின் கவின் லாஸ்லியா சாண்டி அபிராமி என பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











