பிக்பாஸ் வீட்டின் கேப்டனுக்கான டாஸ்க்.. யார் வின் பண்ணுனதுன்னு பாருங்க மக்களே!

Recommended Video

Bigg Boss 3 Highlights:கோவத்தில் எல்லை மீறும் Mugen

சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனுக்கான டாஸ்க் மற்றும் அதில் வெற்றி பெற்றவர் குறித்த புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் கேப்டனாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவரது தலைமையிலேயே அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் பணிகள் நடைபெறும்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மற்றும் வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்க்கின் அடிப்படையில் இரண்டு பேரும், வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள்.

கேப்டன் பதவிக்கு டாஸ்க்

கேப்டன் பதவிக்கு டாஸ்க்

அதன்படி இந்த வாரத்திற்கான கேப்டன் பதவிக்கு மதுமிதா, ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகிய மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று வெளியான கேப்டனுக்கான டாஸ்க்கின் படி சிட்டவுட் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த சிவப்பு, நீலம், பச்சை என மூன்று நிறங்களில் அமைப்பட்டிருந்த போர்டில் கேப்டன் என வரும் வகையில் ஆங்கில எழுத்துக்களை வைத்து பொருத்த வேண்டும்.

மதுமிதா கேப்டன்

மதுமிதா கேப்டன்

யார் முதலில் சரியாக பொருத்துகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவர். அதன்படி, மதுமிதா நீல நிற லெட்டர்களை கொண்டு முதலில் கேப்டன் என அமைத்து, முதல் முறையாக பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ளார்.

ரத்தம் சிந்திய மது

ரத்தம் சிந்திய மது

இதற்கு முன்பு ஒரு முறை கேப்டன் பதவிக்கு போட்டி போட்டார். அப்போது காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திய போதும் அவரால் கேப்டனாக முடியவில்லை.

தொங்கிப்போன லாஸ் முகம்

தொங்கிப்போன லாஸ் முகம்

இம்முறை சொல்லியடித்து வெற்றிபெற்று விட்டார் மதுமிதா. மதுமிதா வெற்றி பெற்றதும் லாஸ்லியாவின் முகம் தொங்கி போய்விட்டது. கைத்தட்டக்கூட அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் சக போட்டியாளரான ஷெரின் முதல் ஆளாக மதுவுக்கு வாழ்த்து கூறினார்.

ஒரிஜினாலிட்டி இழப்பு

ஒரிஜினாலிட்டி இழப்பு

ஓவர் கான்ஃபிடன்ஸில் விளையாடிய தர்ஷன் இம்முறை தோற்றுவிட்டார். தர்ஷனின் தோல்வி பார்வையாளர்களுக்கு பெரிதாக தெரியவில்லை காரணம், மற்றவர்களை மதிக்காத கவின் மற்றும் சாண்டியுடன் அவர் கூட்டு சேர்ந்து தனது ஒரிஜினாலிட்டியை இழப்பதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X