Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கலைஞர் டிவியில் காமெடி சீரியல் மடிப்பாக்கம் மாதவன்
கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய காமெடி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. நளினி, ராம்ஜி நடிக்க உள்ள இந்த சீரியலுக்கு 'மடிப்பாக்கம் மாதவன்' என்று பெயர் வைத்துள்ளனர்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் ஒருவர் அல்லது இரண்டு பேரை வித்தியாச பேர்வழிகளாக தொடர்களில் காண்பிப்பார்கள். இந்த தொடரிலோ ஒட்டுமொத்த குடும்பத்தினருமே வித்தியாசமான பேர்வழிகளாக இருக்கிறார்களாம்.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடி செய்யும் கலாட்டா காமெடி தான், காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் திரைக்களத்தோடு அமைத்திருக்கிறார்களாம்.
இந்த தொடரில், பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் ராம்ஜி, நளினி, மதுமிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி ஜோடியாக வந்து கலக்கியவர் மதுமிதா. மடிப்பாக்கம் மாதவன் ரசிகர்களை சிரிக்கவைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.