தேரில் மகள்களை ஏற்றி குதிரை ஓட்டிய மதுரை முத்து.. களைகட்டிய பூப்புனித நீராட்டு விழா!

சென்னை: நகைச்சுவை நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான மதுரை முத்து தனது இளைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை கோலாகலமாக நடத்திய காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மூத்த மகள் மித்ராவின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்திய வீடியோவை வெளியிட்டு இருந்தார் மதுரை முத்து. இந்நிலையில், தற்போது இரண்டாவது மகள் யாழினி ஸ்ரீயின் சடங்கு விழாவையும் சிறப்பாக செய்து அமர்க்களப்படுத்தி விட்டார்.

Madurai Muthu celebrate his two daughters puberty function in a grand manner
Photo Credit:

இரண்டு மகள்களுக்கும் ஒரே சேர பூப்புனித நீராட்டு விழாவை நடத்திய காட்சிகளையும் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட பலரும் அவருக்கும் அவரது மகள்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் மனைவியின் மகள்கள்: கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு கலக்கிய மதுரை முத்து பட்டிமன்ற பேச்சாளராகவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். அவரது முதல் மனைவி வையம்மாள் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், 6 மாதத்தில் நீதி எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், தனது 2 மகள்களையும் பார்த்துக்கொள்ளவே ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பெண்ணையே மதுரை முத்து திருமணம் செய்துக் கொண்ட தகவல்கள் வெளியான நிலையில், அவரது சர்ச்சைகள் அடங்கின.

இளவரசிகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: மதுரை முத்து தனது மகள் மித்ராவுக்கு பூப்புனித நீராட்டு விழாவை கடந்த ஆண்டு நடத்தியிருந்தார். அதன் வீடியோவையும் அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், 2வது மகளும் வயதுக்கு வந்த நிலையில், இருவருக்கும் சேர்த்து பிரம்மாண்டமாக பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் அந்த விழாவில் பங்கேற்று மதுரை முத்துவின் மகள்களை வாழ்த்தினர்.

தேரில் மகள்களை ஏற்றி: குதிரை பூட்டிய தேரில் இளவரசிகளாக மகள்களை ஏற்று அப்பா மதுரை முத்துவே சாரதியாக அமர்ந்து வண்டி ஓட்டிய காட்சிகள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. மேலும், நாஞ்சில் விஜயன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரை முத்துவின் மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X