சொல்றியா இல்லை ஃபேனை 6 ல வச்சு திருப்பி விடவா?.. மதுரை முத்து காமெடி!

சென்னை: இனி சர வெடியா மதுரை முத்து காமெடி வெடிக்கும் பாருங்க.. நல்லா ரசிக்கலாம். நம்ம விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9ல் மதுரை முத்து, ஆதவன், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் கலந்துகொண்டு இருக்கும் நிகழ்ச்சி நாளை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மதுரை முத்து, ஆதவன், ஜெயச்சந்திரன் என்று எல்லாருக்கும் ஆரம்ப களம் என்னவோ விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிதான். இதில் கலந்துக்கொண்டு உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞர்கள் உலகின் பல நாடுகளுக்கும் காமெடி நிகழ்ச்சிக்காக அன்று முதல் இன்றுவரை சென்று வருகின்றனர்.

ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர் போன்றவர்கள் விஜய் டிவியில் பிற்காலத்தில் செட்டிலாகி இருந்தனர். ஆதவன், மதுரை முத்து, ஜெயச்சந்திரன் போன்றவர்கள் சன் நெட்வொர்க் சானல்களில் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளை செய்து வந்தனர்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி முன்பு மாதிரியே பிரமாண்டமாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 9 ஐ நடத்த திட்டமிட்டு, வேல்யூ மிக்க நடுவர்களை நியமிக்க திட்டமிட்டது. அதன் படி மதுரை முத்து, ஆதவன், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் புதிதாக அவர்கள் கூட்டணியில் இணைய கலக்கப் போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சித் துவங்க உள்ளது.

ரோபோ சங்கர் ஈரோடு மகேஷ்

ரோபோ சங்கர் ஈரோடு மகேஷ்

ரோபோ சங்கர் இதில் நம்ப முடியாத ஒரு ஜட்ஜ்.. எப்போது வேண்டுமானாலும் எந்த வாய்ப்புக்கள் வந்தாலும் சென்றுவிடுவார். ஈரோடு மகேஷ் எப்போதும்போல விஜய் டிவியில் இருப்பவர். இவர்களோடு ஜெயச்சந்திரன், அசார் உள்ளிட்டவர்களும் இணைய... இந்த கலக்கப் போவது யாரு சீசன் 9 க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் வழக்கம் போல அராத்து பெண்ணாக இணைந்து இருந்தாலும், இவரின் ஜாலியான மனப்போக்கு எப்படித்தான் இருக்கிறது என்று இவரின் மறு பக்கத்தையும் இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடியும். வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவி அடிக்கடி இப்படியான வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. வனிதாவும் இந்த வாய்ப்புக்களுக்கு தான் தகுதியானவள் என்றுதான் இதுவரை நிருபித்து இருக்கார். இந்த நிகழ்ச்சியிலும் இப்படியே வனிதா தனது பெயரைக் கைப்பற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வளவாக பேசக்கூடியவர் இல்லை என்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தது. எதாவது சொன்னால் சிரிப்பார்.. சின்னதா ஏதாவது பதில் சொல்லுவார். இந்த நிகழ்ச்சியை ரம்யா எப்படி எதிர்கொள்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதுரை முத்து

மதுரை முத்து

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மெல்லிய உடல்வாகு உடைய ஒரு பெண்.. காதல்னா என்ன தெரியுமா காதல்னா என்ன தெரியுமா என்று அதையே பேசிக்கொண்டு இருக்க, அப்போதுதான் மதுரை முத்து சொல்றியா இல்லை ஃபேனை 6 ல வச்சு உன்பக்கமா திருப்பி விடவான்னு கேட்கறார். காற்றில் பறந்துவிடும்ஜ் அளவுக்கு அந்த பெண் ஒல்லியான தேகம் உடையவர் என்று சொல்லாமல் சொல்லி கலாய்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X