ஊசி எப்படிடா வெடிக்கும்.. மீம்ஸ்களாக போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்து.. செம ஃபன்!
சென்னை: சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார் மதுரை முத்து. இன்ஸ்டாகிராமில் தன்னால் முடிந்த வரை இணையவாசிகளையும் சிரிக்க வைக்க புதிய மீம்களை தனது புகைப்படங்களை எடிட் செய்து வைத்து கலக்கி வருகிறார்.
கலக்கப் போவது யாரு மற்றும் அசத்தப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் மதுரை முத்து.
கோவை குணாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மதுரை முத்து சமீபத்தில் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து இருந்தார்.

மீம்ஸ் முத்து
மதுரை முத்து என்று சொல்லாமல் இனிமேல் மீம்ஸ் முத்து என்றே சொல்லலாம் போல, அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம்களாக போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார் மதுரை முத்து. தினமும் பல விதமான மீம்களை அதுவும் தனது முகத்தை எடிட் செய்தே போட்டு வருகிறார் மதுரை முத்து.

ச்சே என்னடா வேலை இது
ச்சே என்னடா வேலை இது.. லஞ்ச் டைம்ல கூட வேலை பார்க்க சொல்றாங்க என சலித்துக் கொள்ள அப்படி என்ன வேலை என கேட்பவர்களுக்கு.. கேண்டீன்ல வேலை என சொல்லி தர்ம அடி வாங்குவது போன்ற மீமை போட்டு சிரிக்க வைத்திருக்கிறார் மதுரை முத்து.

சிங்கப்பூர் வேலை
சிங்கப்பூருக்கு எதுக்குப்பா வேலைக்கு வந்த என கேட்டதும்.. வாங்கிய கடனை அடைக்கத்தான் என மதுரை முத்து கூறுகிறார். கடன் ஏன்ப்பா வாங்குன என கேட்க, சிங்கப்பூர் வரத்துக்குத்தான் என மீம் போட்டு நக்கல் நய்யாண்டியை அவிழ்த்து விட்டு இருக்கிறார் மதுரை முத்து.

கடி ஜோக்
ஒருத்தன் வந்தான் கையில இருக்குற ஆப்பிளை கடிச்சிட்டு ஜோக்னு சொல்லிட்டு போயிட்டான்.. எனக்கு ஒரு நிமிஷம் புரியல.. யாரு இவன் எதுக்கு ஜோக்னு சொல்லிட்டு போறான்னு கூப்பிட்டு கேட்டா.. இதுதான் கடி ஜோக்னு சொல்லி ஆப்பிளை கடிச்சுட்டு ஜோக் சொன்னா கடி ஜோக் ஆகிடும்னு என்னம்மா உருட்டுறான் என மீம் போட்டு மெர்சல் ஆக்கி உள்ளார்.

ஊசி வெடிச்சிடுச்சு
நான் வாங்குன ஊசி வெடிச்சுடுச்சுடா.. எப்புர்ரா.. நான் வாங்குனது குண்டு ஊசி டா என வழக்கம் போல மொக்கை ஜோக்குகளை டஜன் கணக்குகளில் மீம்களாக பதிவிட்டு வருகிறர் மதுரை முத்து. அவரது மீம்களை பார்த்த ரசிகர்கள், பழைய ஜோக் தங்கதுரையையே மிஞ்சிட்டீங்க போல என்றும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











