Superstar: சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு மதுரை முத்துவின் விளக்கம்.. இப்படி யாராலும் சொல்ல முடியாது

சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த மதுரை முத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் யார் என்று ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை முத்துவின் விளக்கத்திற்கு பலதரப்பட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Madurai Muthus explanation for the Superstar controversy

அந்த வகையில் மதுரை முத்து யாரை தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யை பார்த்து "சூப்பர் ஸ்டார்" என்று குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். அவருக்கு போட்டியாக யாராலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது என்று கூறி வந்தனர்.

அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ஒன்றும் குறைந்தவர் இல்லை என்றும் கூறி வந்தனர். இப்படியாக இணையத்தில் கருத்து போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் சரத்குமார் தான் எதனால் அப்படி பேசினேன் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போல தான் நானும் சூப்பர் ஸ்டார் என்று விஜய்யை சொன்னேன்.

மத்தபடி எனக்கு ரஜினிகாந்த் மீது எந்த கோபமும் கிடையாது. அதுபோல நான் எதனால் இப்படி சொன்னேன் என்பதை குறித்து ரஜினிகாந்திடமும் விளக்கமும் கொடுத்து விட்டேன் என்றும் அந்த பேட்டியில் சரத்குமார் பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து சில நாட்களாக இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை சொல்லி அடுத்த பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.

Madurai Muthus explanation for the Superstar controversy

மீண்டும் சூப்பர் ஸ்டார் குறித்த பிரச்சனை வலம் வரும் நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த மதுரை முத்து நிகழ்ச்சி ஒன்றில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் இணையத்தை திறந்தாலே அங்கே யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இதில் என்னை பொறுத்த வரைக்கும் உண்மையான சூப்பர் ஸ்டார் யார் என்றால் நம்முடைய பெற்றோர்தான். நம்மை படிக்க வைத்து ஆளாக்கி நம்மை அழகு பார்த்தவர் தான் நமக்கு சூப்பர் ஸ்டார் ஆக இருக்க முடியும். ஒரு மகன் ஒருவன் தனக்கு திடீரென்ற ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே வருது எனக்கு ஷூ வாங்க வேண்டும் என்று தந்தையிடம் கேட்கும் போது தந்தை எவ்வளவு பணம் என்று கேட்டால் 2500 என்று மகன் சொன்னதும் சரி வாங்கிவிடலாம் என்று சொல்லுவார்.

ஆனால் மகனுக்காக அவர் 2500 செலவு செய்து ஷூ வாங்கி கொடுத்துவிட்டு தனக்காக இரண்டு மூன்று வருஷம் செருப்பு வாங்காமல் அதை ஒதுக்கி வைப்பார். இப்படியாக பல தியாகங்களை செய்து நம்மை வளர்த்து வரும் அப்பா அம்மா தான் நமக்கு சூப்பர் ஸ்டார். அதை விட்டுவிட்டு படிக்கிற வயசில் பெற்றோர்களை மறந்து இணைய மோகத்தால் சினிமாவில் வாழ்க்கையை சீரழிக்க கூடாது என்று இன்றைய இளைஞர்களிடம் மதுரை முத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X