ஒரு பெண்ணை இப்படித் தான் கேவலப்படுத்துவதா மகத்?

By Siva

சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களால் மகத்தின் செயலை பார்த்து முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் டி-சர்ட் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டி-சர்ட்டில் யாருடைய புகைப்படம் இருக்கிறதோ அவர்கள் போன்று நடிக்க வேண்டும்.

இந்த டாஸ்க்கில் மகத்துக்கு அவருக்கு கொஞ்சமும் பிடிக்காத மும்தாஜின் புகைப்படம் உள்ள டி-சர்ட் கிடைத்தது.

மகத்

மகத்

மும்தாஜ் போன்று நடிக்கிறேன் என்ற பெயரில் மகத் சுடிதார் அணிந்துள்ளார். அதை கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் லெக்கிங்ஸில் துணியை வைத்து திணித்து பின்புறம் தள்ளிக் கொண்டு இருப்பது போன்று செய்துள்ளார். அதை பார்க்கவே நாராசமாக உள்ளது. உங்களுக்கு என்ன தான் மும்தாஜை பிடிக்கவில்லை என்றாலும் பலர் பார்க்கும் டிவி நிகழ்ச்சியில் இப்படியா கேவலமாக நடந்து கொள்வது?

துணி

துணி

பின்புறம் தூக்கிக் கொண்டு தெரியும்படி துணியை வைத்து அடைத்துக் கொண்டு வெளியே வந்த மகத்தை பார்த்து யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர். உடனே மகத்தை தனது பின்புறுத்தை ஆட்டி ஆட்டி வந்து கண்ணாடியில் அழகு பார்த்து நக்கலாக சிரித்தார். இந்த கேவலமான கெட்டப்பில் வந்த மகத்தை பார்த்து மும்தாஜ் அதிர்ச்சி அடைந்தாலும் கோபப்படவில்லை, என்னது இது என்று சிரிக்கத் தான் செய்தார்.

முடியாது

முடியாது

நான் என்ன இப்படியா இருக்கிறேன், தயவு செய்து மகத்தை அந்த துணியை எடுக்கச் சொல்லுங்கள் என்று மும்தாஜ் யாஷிகாவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் மகத்தோ முடியவே முடியாது நான் இப்படித் தான் இருப்பேன் என்று அடம்பிடித்து அந்த பெரிய பின்புறத்தை ஆட்டி ஆட்டி மும்தாஜை கடுப்பேற்றுகிறார். மகத்துக்கு தோழிகள் தான் அதிகம், அவர் காட்டும் அன்பு அனைவருக்கும் பிடிக்கும் என்றார் அவரின் காதலி. தோழிகள் அதிகம் உள்ள நபர் செய்யும் வேலையா இது மகத்?

குசும்பு

குசும்பு

மகத் செய்த காரியத்தை பார்த்து மும்தாஜ் மட்டும் அல்ல பார்வையாளர்களும் டூ மச் என்று தான் தெரிவித்துள்ளனர். பின்னாடி இருக்கும் துணியை எடுடா என்று ரித்விகா கூறியும் மகத் கேட்கவில்லை. கமல் சார் இந்த வார இறுதியில் நீங்களாவது மகத்தை கண்டிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர் யாஷிகாவுடன் சேர்ந்து அடித்த லூட்டியை பற்றி தான் கேட்கவில்லை மும்தாஜை கேவலப்படுத்தியதையாவது தயவு செய்து கேளுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X