பிக் பாஸ் வீடு பத்தி எரியும்போது யாஷிகாவை கட்டிப்பிடித்து கொஞ்சிய மகத்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது மகத் மட்டும் யாஷிகாவை கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல் ஒரு வாரம் மட்டும் தான் போர் அடித்தது பின்னர் அதுவே பழகிவிட்டது. இன்றாவது சுவாரஸ்யமாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் தான் பலரும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
இந்நிலையில் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சண்டை
ப்ரொமோ வீடியோவில் மும்தாஜ், ரித்விகா, டேனி ஆகியோர் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே யார் சண்டை போட்டால் எனக்கென்ன என்பது போன்று மகத் யாஷிகாவை கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

நல்லது
மகத் யாஷிகாவை கட்டிப்பிடித்ததை பார்த்த பாலாஜி த்து என்று துப்பினார். பாலாஜி செய்த அதே வேலையை தான் மகத் டிவியில் வரும்போது எல்லாம் பார்வையாளர்கள் தினமும் செய்கிறார்கள்.

பேச்சு
பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கழித்து தான் ரித்விகா பேச ஆரம்பித்துள்ளார். இத்தனை நாட்களாக அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி
பிக் பாஸில் ஒரே புருஷன், பொண்டாட்டி சண்டையாக உள்ளது என்று விமர்சனம் எழுந்தது. இதையடுத்து தற்போது பிறரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











