சன்டிவிக்கு போட்டியாக வரும் விஜய் டிவி மகாபாரதம் ...
விஜய் டி.வி.யில் அக்டோபர் 7 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரம்மாண்டமான இதிகாசத் தொடர் மகாபாரதம் ஒளிபரப்பாக உள்ளது.
மகாபாரதம் தொடர் தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. தமிழக நடிகர்களைக் கொண்டு நேரடியாக தயாரிக்கப்பட்ட தொடர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.
ஸ்டார் பிளஸ் சேனலில் பிரம்மாண்டமாக 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மகாபாரதம் ஒளிபரப்பாகிறது. அதனை மீண்டும் தமிழில் டப்பிங் செய்து ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்ப உள்ளனர்.

புதிய மகாபாராதம்
பல மகாபாரத கதைகளை இதுவரை கேட்டிருந்தாலும், நாம் அறிந்திராத பல கிளைக்கதைகளை யும் எடுத்துச் சொல்கிறது, புதிய படைப்பாக உருவாகி வரும் இந்த மகாபாரதம் தொடர்.

நுணுக்கமான கதைகள்
மகாபாரதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குருஷேத்திரத்தில் நடைபெறும் யுத்தமும் அது தொடர்பான நிகழ்வுகளுமே. ஆனால் அவையனைத்தையும் தாண்டி பல வரலாற்று சிறப்புமிக்க நுணுக்கமான கதையையும் இந்த தொடரில் காணலாம்.

பிரம்மாண்டமான தொடர்
சத்யவதி, சாந்தனு வாழ்க்கையிலிருந்து தொடங்கி, பீஷ்மரின் தியாகம் பற்றிய அறிமுகத்தோடு பயணிக்கிறது கதை. இந்த தொடருக்காக 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ள ஸ்டார் ப்ளஸ் சேனல்.

அழகும் ஆடம்பரமும்
ஆடம்பரமான செட், அழகான உடைகள்... அணிகலன்கள்... ஆர்ப்பாட்டமான விளம்பரங்கள் என ஸ்டார் குரூப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது சன்டிவி மகாபாரதம் தொடருக்கு சரியான போட்டியாக அமையும் என்று பேசப்படுகிறது.

தொடர்களின் நடுவே
இந்த மகாபாரதம் தொடருக்காக பிற தொடர்களின் நடுவே தொலைக்காட்சி நடிகர்களை வைத்து புதிய யுக்தியில் விளம்பரம் செய்கின்றது விஜய் டிவி.

மகாபாரத வாகனங்கள்
இந்த பிரம்மாண்ட தொடருக்காக தமிழ்நாடு முழுவதும் பிரத்தியேக மகாபாரத வாகனங்கள் சுற்றி வருகின்றன. வாகனங்களில் வரும் நிபுணர் குழு நடத்தும் கேள்வி-பதில் போட்டியில் கலந்துகொண்டு சரியான விடை கூறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











