பாண்டவர்களும்… கவுரவர்களும்… மகாபாரதத்தின் சுவாரஸ்ய எபிசோட்

By Mayura Akilan

விஜய் டிவியின் மகாபாரதம் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாண்டுவின் மரணத்திற்குப் பின்னர் ஹஸ்தினாபுரம் திரும்புகின்றனர் பாண்டவர்கள். குந்தியோடு திரும்பும் பாண்டவர்களை நாட்டு மக்கள் கண்ணீர் மல்க வரவேற்கின்றனர்.

தேரோட்டியின் மகன் அரியணை ஏறுவேன் என்று வளர்ப்புத் தாயிடம் சபதமிட்டு புறப்படும் கர்ணனும், நாடுதிரும்பும் குந்தியும் சந்திக்கின்றனர்.

கர்ணனை கண்ட உடன் அவள் கண்களில் கண்ணீர் வழிகிறது. அதே நேரத்தில் கர்ணனின் கண்களில் வழியும் கண்ணீருக்கும் பதில் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் குந்தியின் காலில் விழுகிறான் கர்ணன்.

இளவரசுப் பட்டம் யாருக்கு

இளவரசுப் பட்டம் யாருக்கு

நடந்த துயரத்தைப் பற்றி கவலைப்படாமல் ஹஸ்தினாபுரத்தில் சிறுவன் துரியோதனனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் துடிக்கிறான் சகுனி. அதை மக்கள் முன்னிலையில் அறிவிக்கிறான். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பீஷ்மரின் எச்சரிக்கை

பீஷ்மரின் எச்சரிக்கை

இதையரிந்த பீஷ்மர் இளவரசுப் பட்டம் யாருக்கு என்பதை அரசவை முடிவு செய்யும் என்று கூறி சகுனியை எச்சரிக்கின்றார். இதனால் பீஷ்மருக்கு எதிராக துரியோதனுக்கு துர்போதனைகள் செய்கிறான் சகுனி.

எதிரிகள் வருகிறார்கள்

எதிரிகள் வருகிறார்கள்

பாண்டவர்களை சகோதரர்கள் என்று கூறாமல் எதிரிகள் என்று கூறி எச்சரிக்கின்றான். அதனால் அவர்கள் ஐவரையும் கண்ட 100 கவுரவர்களும் எதிரிகளாகத்தான் பார்க்கின்றனர்.

ஜெயித்த பாண்டவர்கள்

ஜெயித்த பாண்டவர்கள்

பாண்டவர்கள் அரண்மனைக்குள் நுழைந்த உடன் காலில் விழுந்து வணங்குங்கள் என்று கூறுகிறான் துரியோதனன் ஆனால் மூத்தவர் யுதிர்ஷ்டிரன்தான் என்று கூறி துரியோதனை காலில் விழ வைக்கிறார் பீஷ்மர்.

200 எபிசோடுகள்

200 எபிசோடுகள்

மகாபாரதம் தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைக் கண்ட தயாரிப்பாளர்கள் 200 எபிசோடுகளாக நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

கண்ணனின் அறிவுரைகள்

கண்ணனின் அறிவுரைகள்

கதையின் போக்கினை கூறி ஒவ்வொரு முறையும் சிந்தித்து செயலாற்றுங்கள் என்று கண்ணன் கூறுவது தனி சிறப்பு. இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப கதையை வடிவமைத்துள்ளதும் கூடுதல் அழகு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X