»   »  கர்ணனிடம் இரண்டு வரம் கேட்ட குந்தி...

கர்ணனிடம் இரண்டு வரம் கேட்ட குந்தி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குருச்ஷேத்திர போரை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்களாம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர் ‘மகாபாரதம்'. தமிழ் நடிகர்களைக் கொண்டு தமிழில் சினிவிஷ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிறது

இதுவரை 122 எபிசோடுகளை கடந்துள்ளது.

கடந்த வாரத்தில் பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதான தூது வந்த போது துரியோதன் கிருஷ்ணனை அவமானம் செய்தான். அவனது செயல் கண்டு வருந்திய கிருஷ்ணன், தன் சமயோஜித புத்தியால் விதுரனின் விஷ்ணு தனுசை உடைக்கச் செய்தது, தான் யார் என்று விஸ்வரூபம் காட்டி குருஷேத்திர போர் பிரகடனம் செய்தார்.

போர் ஆலோசனை

போர் ஆலோசனை

இந்த வாரம் குருஷேத்திர போருக்காக தம்பி துச்சாதனனுடனும், நண்பன் கர்ணனுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளான் துரியோதனன்.

துரியோதனன் அலட்சியம்

துரியோதனன் அலட்சியம்

அப்போது அங்கு வரும் பீஷ்மரும், திருதராஷ்டிரனும் போர் வேண்டாம் என்றும் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம் பற்றியும் எடுத்துக்கூறியும் அதை அலட்சியம் செய்கிறான் துரியோதனன். கர்ணனும் பீஷ்மரின் கருத்தை ஏளனம் செய்கிறான். போர் நடப்பது உறுதி என்றாகிறது.

குந்தி தேவி

குந்தி தேவி

குந்தி தேவி சூர்ய நமஸ்காரத்தில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு வரும் கிருஷ்ணன், சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் கர்ணனுக்கும் உள்ள உறவின் ரகசியத்தை எடுத்துக்கூறுகிறான்.

கிருஷ்ணனின் சமாதானம்

கிருஷ்ணனின் சமாதானம்

கண்ணீர் விட்டு அழுத குந்தி தேவியோ, கர்ணனைப் பார்த்து என்னுடன் அழைத்து வந்து விடுகிறேன் என்று கூறி புறப்படுகிறாள். அதற்கு கிருஷ்ணன், கர்ணன் உன்னுடன் வரமாட்டான். அப்படி வராத நிலையில் அவனிடம் இரண்டு வரம் கேள் என்று கூறி அனுப்புகிறான்.

இரண்டு வரங்கள்

இரண்டு வரங்கள்

யுத்த களத்தில் கர்ணன் தன்னுடைய நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பிரயோகிக்க வேண்டும்

அர்ஜூனனைத் தவிர மற்ற நான்கு பேரை கர்ணன் கொல்லக்கூடாது என்பதுதான் அந்த இரண்டு வரங்கள். இந்த வரங்களை வாங்கி வருகிறேன் என்று கூறி கர்ணனைக் காண புறப்படுகிறாள் குந்தி.

கண்ணீர் விட்ட கர்ணன்

கண்ணீர் விட்ட கர்ணன்

கர்ணனைக் கண்ட குந்தி கண்ணீர் பெருக, பேசுகிறாள். தன்னுடைய மூத்த மகன் நீதான் கர்ணா என்று குந்தி கூறியதை கர்ணன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் முதல்முதலாக ஆற்றில் விடும் போது வைத்து அனுப்பிய ஆடையை வைத்து உண்மையை எடுத்துக்கூறுகிறாள் குந்தி. தாயைக் கண்ட மகிழ்ச்சியில் கண்ணீரோடு மடியில் படுத்துக்கொள்கிறான் கர்ணன்.

வரம் கொடுத்த கர்ணன்

வரம் கொடுத்த கர்ணன்

தன்னுடன் வந்து விடுமாறு கர்ணனை அழைக்கிறாள் குந்தி, அதற்கு கர்ணன், துரியோதன் தனக்கு நட்பு ரீதியாக செய்த நன்மைகளை எடுத்துக்கூறி குந்தியுடன் வரமுடியாது என்று கூறிவிடுகிறான்.

122 எபிசோடுகள்

122 எபிசோடுகள்

தமிழில், தமிழுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட எந்தவொரு சரித்திர தொடரும் 50 எபிசோடுகளை கடந்தது இல்லை. நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக இத்தொடரை ஒளிபரப்பாகி வருகிறோம். 122 எபிசோடுகளை கடந்துள்ளோம் என்கிறார் தொடரின் இயக்குநர் சி.வி.சசிகுமார்.

மகாபாரத கருத்துக்கள்

மகாபாரத கருத்துக்கள்

தமிழுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த தொடரில் மற்றவர்கள் சொல்லாத நுட்பமான கருத்துக்களைச் சொல்கிறோம். பிரமாண்டமும், கருத்தும் ஒருசேர இருப்பதே இதன் சிறப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து வழங்கி வருகிறோம்.

பிரம்மாண்டம் மட்டுமல்ல

பிரம்மாண்டம் மட்டுமல்ல

கற்பனையான பிரம்மாண்டத்தை விட உண்மையான கருத்துக்கே, இந்த மகாபாரதம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. மகாபாரதத்தின் குருஷேத்திர போர் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. அதை எட்டு கேமரா படமாக்குகிறது. 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், 40க்கு மேற்பட்ட தேர்கள், 100 குதிரைகள் என பெரிய அளவில் எடுக்க இருக்கிறோம். சின்னத்திரை வரலாற்றில் இது ஒரு சாதனை என்கிறார் இயக்குநர் சி.வி. சசிகுமார்.

English summary
Duryodhana is discussing war plans with Karna and Dushshasana. Dritarashtra and Bhishma enter the room. Dritarashtra tells Duryodhana to forsake the idea of war and work towards peace with the Pandavas. Krishna had shown to them His Universal Form and made persuasive arguments for peace.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil