twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன் டிவி மகாபாரதம் குழுவினரின் சிலிர்ப்பான அனுபவங்கள் !

    By Mayura Akilan
    |

    சன்டிவியில் மகாபாரதம் தொடர் நாளை( ஞாயிறு) முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    இந்த தொடரின் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, நடிகர்கள் பலரும் தங்களின் முன் ஜென்மம் காரணமாகவே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். கதை புரிந்தாலும், புரியாவிட்டாலும் இதிகாசத்தின் மீது கொண்ட காதலால் மகாபாரதம் தொடரை ரசித்தவர்கள் நேரடியாக தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை ரசிப்பார்கள் என்று கூறுகின்றனர் தொடரின் தயாரிப்பாளர்கள்.

    அதிசயமான நிகழ்வு இது

    அதிசயமான நிகழ்வு இது

    வட இந்தியாவிலிருக்கும் சுனில் மேத்தா, திடீரென்று பாட்ஷா புகழ் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் அடித்து 'மகாபாரதம் கதையை ஒரு தொடராக எடுக்கலாமா?' என்று கேட்க, 'நிஜமாதான் சொல்றீங்களா?' என்றாராம் சுரேஷ்கிருஷ்ணா. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அதிசயம்தான் என்கின்றனர். கிட்டதட்ட ரெண்டே மாதத்தில் ஒரு குழுவே சுறுசுறுப்பாகி பத்து எபிசோடுகளை தயாரித்துவிட்டார்கள்.

    முன்ஜென்ம பாக்கியம்

    முன்ஜென்ம பாக்கியம்

    கிருஷ்ணனின் கதையை ஒரு சுரேஷ் கிருஷ்ணன் செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்' என்று தன்னையே வியந்தார் சுரேஷ்கிருஷ்ணா. 'முன்ஜென்ம பாக்கியம்தான் என்னை இப்படி ஒரு செயலை செய்ய வைச்சுருக்கு என்கிறார்.

    வியாசராக வாழும் நடிகர்

    வியாசராக வாழும் நடிகர்

    'படப்பிடிப்பில் எந்த நடிகரையும் இங்க வந்து இப்படி நில்லு, ஒரு டேக் போய் பார்க்கலாம் என்றெல்லாம் பேசவே முடியவில்லை. வியாச முனிவர் என்றால் அவரை வியாசராகவே பார்த்தேன். கிருஷ்ணன் என்றால் அவரை கிருஷ்ணராகவே பார்த்தேன்' என்றார் சுரேஷ்கிருஷ்ணா.

    கடவுளின் கிருபை இது

    கடவுளின் கிருபை இது

    முதல்ல இது என்னால முடியுமான்னு பயந்தேன். ஆனால் ஆண்டவன் அனுக்ரஹத்தால் என்னால இந்த தொடருக்கு பேக்ரவுண்ட் மியூசிக் போட முடிஞ்சுருக்கு. அந்த டைட்டில் பாடலை எல்லாரும் பாராட்டுறாங்க. அதுவும் கடவுளோட கிருபை' என்றார் தேனிசை தென்றல் தேவா. அண்ணாமலை, பாட்ஷா என்று இவரும் சுரேஷ் கிருஷ்ணாவும் அடையாத வெற்றிகள் இல்லை. இப்போது மகாபாரதம்!

    திரௌபதி கோவிலின் மகிமை

    திரௌபதி கோவிலின் மகிமை

    பாஞ்சாலியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா, இந்த தொடரில் திரௌபதியாக நடிக்கிறார். 'எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு திரௌபதி கோவில் இருக்கு. அங்க அடிக்கடி போய் சாமி கும்பிடுவேன். பின்னாளில் நானும் ஒரு திரௌபதியாக நடிப்பேன் என்று எனக்கே தெரியாது என்கிறார்.

    முழுமையடைந்து விட்டேன்

    முழுமையடைந்து விட்டேன்

    என்னை சினிமாவில் நடிக்க பலரும் அழைச்சிருக்காங்க. நான் பலவந்தமா மறுத்திருக்கேன். ஆனால் அதற்கப்புறம் 'செஞ்சுருக்கலாமோ' என்று தோணும். ஆனால் இனிமேல் எனக்கு அந்த ஆசை கூட வராது. இதுவே நான் அடைஞ்ச முழுமையான ரோல்' என்று சிலிர்க்கிறார் ஐஸ்வர்யா.

    எப்படியோ இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் ஒருவித சிலிர்ப்புடனே இருக்கின்றனர்.

    English summary
    For the first time in the history of Tamil Television the magnum opus epic “Mahabharatham” is produced in Tamil by Cinevistaas. Poovilangu Mohan, OAK Sundar, Ilavarasan, Devipriya, Pooja Lokesh, Iswarya, Director Suresh Krishna, Cinematographer Ganesh at the Mahabharatham. The best of technicians from TV & Film industry are involved in creating this great epic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X