மகாலட்சுமியின் தலைப்பொங்கல் சந்தோசம்!!
சரவணன் மீனாட்சியின் துறு துறு கதாநாயகி மகாலட்சுமிக்கு இது தலைப் பொங்கல்.
கர்நாடகாவில் பிறந்து தமிழ்நாட்டின் மருமகளான மகாலட்சுமிக்கு புகுந்த வீடு இருக்குமிடம் ஆண்டாள் வாசம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கேதான் மண்வாசம் கமழும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப் போகிறாராம்.
பக்கத்தில்தானே அலங்கா நல்லூர்... அப்படியே ஜல்லிக்கட்டும் பார்த்துவிட்டு வருவோம் என்று கணவரிடம் கேட்கவே கணவர் தினேஷ் ஒகே சொல்லிவிட்டாராம். எனவே இரட்டிப்பு சந்தோசத்தில் இருக்கிறார் மகாலட்சுமி.

சீரியல் ஜோடிகள்
கடந்த நவம்பரில் காதல் கணவர் தினேஷ் உடன் திருமணம் முடிந்த கையோடு சீரியலில் பிஸியாகிவிட்டார். தினேஷ் புதுக்கவிதை சீரியலில் ஹீரோ, மகாலட்சுமி சரவணன் மீனாட்சியில் ஹீரோயின்.

ஹனிமூன் டிரிப்
சமீபத்தில்தான் இந்த ஜோடிக்கு லீவ் கிடைத்துள்ளது. எனவே வயநாட்டிற்கு ஹனிமூன் சென்று திரும்பியுள்ளனர்.

தலைப் பொங்கல்
இது மகாலட்சுமிக்கு தலைப் பொங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் போய் பொங்கல் கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ரெடி
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பிரபலம் என்பதால் ஆசையோடு கணவரிடம் கேட்டு சம்மதம் வாங்கிவிட்டாராம். அப்போ இந்த முறை ஜாலியோடு சர்ப்ரைஸ் பொங்கல் என்கிறார் இந்த தமிழ்நாட்டு மருமகள்.


Click it and Unblock the Notifications











