அம்மாவை விட உயரமாக வளர்ந்துட்டாரே மகன்.. கணவர் பிறந்தநாள்.. மகாலட்சுமி போட்ட போஸ்ட்டை பாருங்க!
சென்னை: சின்னத்திரை நடிகையும் முன்னாள் விஜேவுமான மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஃபேட்மேன் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்று வந்த நிலையில், மீண்டும் படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை விட அதிகமாக பேசப்பட்டது எங்களோட திருமணம் தான் என்று தன்னுடைய திருமணத்தை ட்ரோல் செய்தவர்கள் குறித்தும், மீம்ஸ் போட்டவர்கள் குறித்தும் நல்ல மனசுடன் வாழ்த்தியவர்கள் குறித்தும் ரவீந்தர் சந்திரசேகரன் பேட்டியளித்திருந்தார்.

இந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற டிராகன் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு பலரும் கச்சிதமான கதாபாத்திரம் என கலாய்த்துத் தள்ளினர்.
அடுத்தடுத்து படங்கள்: பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் கல்லூரியில் பாஸ் செய்ய வைப்பது, அமெரிக்க கம்பெனியில் மோசடி செய்து வேலை வாங்கித் தருவதாக வில்லங்கமான கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக நடித்து அசத்தியிருப்பார். சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் தயாரிப்பாளராகவே நடித்து என்னோட படத்துக்கு ரிவ்யூ பண்ணுடா பார்க்கலாம் என சவால் விடும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
ஃபேட்மேன் பிறந்தநாள்: 1984ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்த ரவீந்தர் சந்திரசேகரன் நேற்று தனது 41வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். மோசடி புகாரில் சிறைக்குச் சென்று திரும்பிய பின்னர், மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வரும் ரவீந்தர் சந்திரசேகரன் தனது குடும்பத்துடன் ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதுதொடர்பாக மகாலட்சுமி பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அம்மாவை விட உயரம்: அனில் நெரிடிமிலி என்பவரை திருமணம் செய்த மகாலட்சுமி அவருடன் ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். அவர்களுக்கு சச்சின் என்கிற மகன் உள்ளார். அம்மா மகாலட்சுமியுடன் தான் சச்சின் வளர்ந்து வருகிறார். ரவீந்தர் சந்திரசேகரன் நடுவில் நிற்க ஒரு பக்கம் சச்சின் மற்றும் இன்னொரு பக்கம் மகாலட்சுமி என இருவரும் இருபுறம் நிற்பதை பார்த்த ரசிகர்கள், குழந்தை சச்சின் அதற்குள் அம்மாவை விட உயரமாக வளர்ந்து விட்டானே என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











