டெலி பிலிமில் நடிக்கும் சீரியல் நடிகை மஹாலட்சுமி!
சின்னத்திரை சீரியல் மட்டும் போதும் சினிமா வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை மகாலட்சுமி தன்னுடைய பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையே டெலி ஃபிலிம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்களின் செல்லம் மகாலட்சுமி. ஹீரோயினி, வில்லி என எந்த கதாபாத்திரம் என்றாலும் அசத்துவார்.
தற்போது வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, ஒரு கை ஓசை, மன்னன் மகள், என ஒரே நேரத்தில் 5 தொடர்களில் நடித்து வரும் ஒரே நடிகையும் மஹாலட்சுமிதான்.

டெலி ஃபிலிமில் மகாலட்சுமி
இத்தனை பிசியான ஷெட்யூலிலும் இது நல்லா இருக்கு என்ற ஒரு டெலிபிலிமிலும் நடித்து முடித்துள்ளார் மகாலட்சுமி.

கதை பிடித்தது
சினிமா வாய்ப்புகளைகூட தவிர்த்துவிடும் நான் இந்த டெலிபிலிமின் கதையை இயக்குனர் ரவிராஜா என்னிடம் சொன்னபோது உடனே நடிக்க வேண்டும்போல இருந்தது என்று கூறியுள்ளார் மகா.

போராடும் பெண்ணின் கதை
ஒரு விதவை பெண் இந்த சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ எத்தனை போராட்டம் நடத்த வேண்டியது இருக்கிறது. எவ்வளவு அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை சொல்லும் கதை.

நடிக்கும் போதே அழுதேன்
பார்த்தால் ஒரு சொட்டு கண்ணீராவது விடாமல் இருக்க மாட்டார்கள். விதவைகள் மீது மரியாதையை ஏற்படுத்தும். நானும் அந்த கதாபாத்திரத்தை அழுதபடியேதான் நடித்துக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் மகா. அந்த டெலிபிலிம் ஒளிபரப்பாகும் நாளுக்காக காத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











