Just In
- 11 min ago
பிக்பாஸ் நடிகை தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி
- 1 hr ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 2 hrs ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 2 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
Don't Miss!
- News
ஒவ்வொரு நாளும் வெற்றி அல்ல.. நல்லதை எடுத்துக்கங்க!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வேளாண் பல்கலையில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Finance
நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்காக காத்திருக்கும் 6 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..! #Paytm
- Sports
பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேய் மாதிரி கத்திய மகத், ஐஸ்வர்யா: கொஞ்சமும் கண்டிக்காத கமல்
சென்னை: நேற்று பிக் பாஸ் வீட்டில் மகத்தும், ஐஸ்வர்யாவும் பேய் மாதிரி கத்தியும் கமல் ஹாஸன் அவர்களை கண்டிக்கவில்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் நேற்று மகத்தும், ஐஸ்வர்யாவும் கீழ்த்தரமாக நடந்துவிட்டு தேவையில்லாமல் மும்தாஜ் மீது பழிபோட்டார்கள். தமிழ் திரையுலகில் ஒரு இடத்தை பிடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு சத்தியமாக அவர் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.

ஐஸ்வர்யா
மகத்தும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து மும்தாஜை டார்கெட் செய்து திட்டினார்கள். மும்தாஜ் முகத்தை பார்த்தாலே கேவலமாக உள்ளது என்றார் மகத். சம்பந்தமே இல்லாமல் ஐஸ்வர்யா வாலு வாலுன்னு கத்திவிட்டு கதவை திறங்க பிக் பாஸ் நான் வெளியே போகிறேன் என்று விறுவிறுவென்று கதவுக்கு அருகில் சென்றார். அப்பாடி ஒரு வழியாக ஐஸ்வர்யா தொல்லை முடிந்தது என்று பார்த்தால் கதவுக்கு அருகே சென்ற வேகத்தில் திரும்பி வந்து மும்தாஜை திட்டினார்.

கேவலம்
ஏன் மகத், ஐஸ்வர்யா கத்துவது, இப்படி முகத்தை மாற்றுவது எல்லாம் உங்களுக்கு கேவலமாக தெரியவில்லையா. கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் ஐஸ்வர்யாவும், மகத்தும் பேசியதை பார்த்தால் ச்ச்சீ கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாத இவர்களை போய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறார்களே என்று நமக்கு தான் எரிச்சல் வருகிறது.

மும்தாஜ்
மும்தாஜை பார்த்து நீங்களா மனுஷனா, சைத்தான், பேய் என்று மகத்தும், ஐஸ்வர்யாவும் கத்தினார்கள். இத்தனையும் கேட்டு மும்தாஜ் பதில் வார்த்தை பேசாமல் அமைதியாக இருந்தார். தேவையே இல்லாமல் எதற்காக ஐஸ்வர்யா இப்படி பேயாட்டம் ஆடுகிறீர்கள்? அப்படி என்ன பிக் பாஸ், ஐஸ்வர்யா மீது உங்களுக்கு கரிசனம். அந்த பெண்ணை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் அவரை காப்பாற்றுவதில் அவ்வளவு குறியாக இருக்கிறீர்கள்?

கமல்
ஐஸ்வர்யா பேய் கத்து கத்தியதை கமல் கண்டிக்கவில்லை. மாறாக மும்தாஜிடம் கேள்வி கேட்கிறார். இதை பார்த்த பார்வையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது என்பது கமலுக்கு தெரியவில்லையா?. பிக் பாஸை போன்றே கமல் ஹாஸனும் எதற்காக ஐஸ்வர்யாவுக்கு ஆதரவளிக்கிறார் என்று புரியவில்லை. உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை கமல் சார்.