பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள இரண்டு விருந்தாளிகள்... யாருன்னு பாருங்க மக்களே!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 93 : பிக் பாஸ் வீடிற்குள் வந்த பிக் பாஸ் காதல் ஜோடி

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டு விருந்தாளிகள் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதனால் போட்டியை கடுமையாக்கியுள்ள பிக்பாஸ் அவ்வப்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பனீஷ்மென்ட்டும் கொடுத்து வருகிறார். நேற்று நாமினேஷனே இல்லாமல் அனைவரையும் பச்சை மிளகாய் சாப்பிட வைத்தார் பிக்பாஸ்.

யாஷிகா அன்ட் மகத்

யாஷிகா அன்ட் மகத்

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைத்து வர முடிவு செய்திருக்கிறார் பிக்பாஸ். அதன்படி கடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது இன்று வெளியான முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

அவர்களை அணைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் ஆரத்தழுவி வரவேற்றனர். அப்போது சாண்டியிடம் பேசும் மகத், ஒரு வாரம் தங்கப்போகிறோம் என்று கூறுகிறார். இதனை கேட்ட சாண்டி, சீனு சீனு.. பிக்பாஸ் வீட்டிற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம் என்கிறார்.

வீடு செம

வீடு செம

வீட்டை சுற்றும் முற்றும் பார்த்த யாஷிகா ஆனந்த் உங்க வீடு செமயா பண்ணிருக்காங்கய்யா என்கிறார். தொடர்ந்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசுகின்றனர் மகத்தும் யாஷிகாவும்.

ஆல் த பெஸ்ட்

ஆல் த பெஸ்ட்

அப்போது டாஸ்கையெல்லாம் நல்லா பண்ணுங்க, ஆல் த பெஸ்ட் என்கிறார் மகத். அவரை தொடர்ந்து பேசும் யாஷிகா, இந்த வீடு எல்லாவற்றையும் சாதகமாக்கியிருக்கிறது என்று கூறுகிறார். இவ்வாறு முடிகிறது முதல் புரமோ.

மகத்துக்கு ரெட் கார்டு

மகத்துக்கு ரெட் கார்டு

கடந்த சீசனில் பங்கேற்ற மகத்தும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டில் காதலிக்க தொடங்கினர். மும்தாஜிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதால் மகத் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X