மகத், டேனி இடையே பயங்கர சண்டை: இருக்கு இன்னைக்கு செமத்தியா இருக்கு
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இன்று இரவு பெரிய சண்டை இருக்கு போலயே.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா அட்டூழியம் செய்த பிறகு பெரிதாக எந்த சண்டையும் இல்லை. இந்நிலையில் இன்று ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

டாஸ்கின்போது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் விளையாடுகிறார் மகத். அப்போது எதிரணியை சேர்ந்த ஐஸ்வர்யாவை தள்ளிவிட்ட மகத் டேனியையும் பிடித்து தள்ளினார்.
இதை பார்த்த டேனிக்கு கோபம் வந்து தள்ளாதடா, எதுக்கு நீ மேல கையை வெக்கிற என்று கேட்டார். உடனே மகத் டாஸ்கை விட்டுவிட்டு வந்து டேனியுடன் மோதினார்.
வா, வா பார்த்துவிடலாம் என்று மோத டேனியோ போடா என்று கூறினார். ப்ரொமோ வீடியோவில் பார்த்தால் சண்டை சீரியஸாகத் தான் தெரிகிறது. ஆனால் நிகழ்ச்சியில் பார்த்தால் காமெடியாகிவிடாமல் இருக்க வேண்டுமே.
யாஷிகா கமலிடம் சீன் போட்டதால் மகத் கடுப்பில் இருப்பது போன்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











