பிக் பாஸுக்கு வந்தபோது மகத்திடம் எது இருந்ததோ அது தற்போது இல்லை
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது மகத்திடம் எது இருந்ததோ அது தற்போது இல்லை.
படங்களில் சாதுவாக இருந்த மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த புதிதிலும் அப்படித் தான் இருந்தார். ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் சேர்ந்து தான் அவரை ட்ரிக்கர் செய்தனர்.
அதன் பிறகே அவர் கொடூர வில்லனாக மாறி ஆட்டம் போட்டார்.

பிராச்சி
உள்ளே போய் கடலை போடுவேன் என்று காதலி பிராச்சியிடம் சொல்லிவிட்டு தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் மகத். கடலை போட்டுக்கோ ஆனால் ஒழுங்கா வீட்டிற்கு திரும்பி வா என்று வழியனுப்பி வைத்துள்ளார் பிராச்சி. மகத்தை பிக் பாஸ் வீட்டில் விட வந்த பிராச்சி அவரை அழைத்துச் செல்ல வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம்
நான் என்னை திருத்திக் கொள்கிறேன் என்று பார்வையாளர்களை பார்த்து கூறினார் மகத். ரெட் கார்டை பார்த்த உடனே தான் தான் வெளியே போகிறோம் என்பது மகத்துக்கு தெரிந்துவிட்டதாம். மகத்துக்கு கமல் பொறுமையாக அறிவுரை வழங்கினார். கோபம் நம்மையே அழித்துவிடும் என்று தெரிவித்தார் கமல்.

ட்ரிக்கர்
மத்தவங்க ட்ரிக்கர் செய்தால் ஏன் ட்ரிக்கர் ஆகுறீங்க என்று மகத்திடம் கேட்டார் கமல். தனக்கு எதற்காக அடிக்கடி கோபம் வருகிறது என்பதை மகத் கூறினார். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்சை தான். உங்களுக்கு அறிவுரை வழங்வதால் எனக்கு அது உள்ளது என்று இல்லை. எனக்கு வரவில்லை. நானும் பழகிக் கொண்டு தான் இருக்கிறேன் என்று கமல் உண்மையை சொன்னது பாராட்டுக்குரியது.

மகத்
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது மகத் முகத்தில் இருந்த அப்பாவித்தனம், அவர் இங்கிருந்து கிளம்பிச் சென்றபோது இல்லை. கோபப்பட்டு நிறைய விஷயங்கள் செய்தேன், மன்னித்து விடுங்கள் என்று அவர் பார்வையாளர்களிடம் கூறினார். சிறு வயதில் இருந்தே பெற்றோர் அருகில் இல்லாமல் விடுதியில் வளர்ந்த மகத்தின் கதையை கேட்ட பிறகு அவர் மீது பச்சாதாபம் ஏற்பட்டுள்ளது. போனது போகட்டும் மகத், இனியாவது கோபத்தை கட்டுப்படுத்த பாருங்க.


Click it and Unblock the Notifications











