எல்லாம் என்னால தான் வந்துச்சு: தலையில தலையில அடித்து சீன் போடும் மகத்
சென்னை: மகத் டென்ஷனாகி தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மும்தாஜுக்கும், மகத்தும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. சொல்லப் போனால் மும்தாஜை பல போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் மும்தாஜ் மகத்தை நாமினேட் செய்துள்ளார்.
நாமினேட்
மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் மகத்தை நாமினேட் செய்கிறேன் என்று மும்தாஜ் கூறிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதே வீடியோவில் மகத் மும்தாஜை நாமினேட் செய்துள்ளார்.
மகத்
பாலாஜி தன்னை தானே நாமினேட் செய்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என்கிறார். மகத்தோ டென்ஷனாகி எல்லாம் என்னால தான் வந்துச்சு என்று கூறி தன் தலையில் தானே அடுத்துக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அனுப்புங்க
மகத் கோபப்பட்ட ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் அவரை உடனே வெளியே அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைவி
இந்த வீட்டோட தலைவி நான் ஆர்டர் பண்ணுவேன் என்று ஐஸ்வர்யா பாலாஜியுடன் மோதும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆக இன்று இரவு பாலாஜி தான் டார்கெட். நிறைய சண்டையை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











