ரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா?

By Siva

சென்னை: மகத் மும்தாஜ் மீது தேவையில்லாத வெறுப்பை காட்டி பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் மகத்துக்கு மும்தாஜை கண்டாலே பிடிப்பது இல்லை. டாஸ்கின்போது ஒன்று சேர்ந்து வேலை பார்த்தாலும் அவ்வப்போது அவரை பற்றி புறம் பேசி வருகிறார் மகத்.

பெண்கள் தோற்றுப் போவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மகத் புறம் பேசுகிறார்.

மகத்

மகத்

யாஷிகா மும்தாஜ் அருகில் அமர்ந்தது மகத்துக்கு ஒரு பெரிய குற்றமாம். மும்தாஜுக்கு எதிராக பாயிண்ட் எடுத்துக் கொடுத்துவிட்டு அவர் அருகிலேயே போய் உட்காருகிறார் என்று மகத் ஐஸ்வர்யாவிடம் ஆங்கிலத்தில் தெரிவித்தார். மகத் பார்வையாளர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பாலாஜி

பாலாஜி

பொம்மை தைக்கும்போது சரியாக தைக்காதது பற்றி மகத் சென்றாயனிடம் கோபமாக கூறினார் என்று மும்தாஜ் பாலாஜியிடம் தெரிவித்தார். இதை கேட்ட மகத்தும், ஐஸ்வர்யாவும் மும்தாஜிடம் மல்லுக்குப் பாய்ந்தனர். என்னை இழுக்கிற வேலை வச்சுக்காதீங்க, உங்க வேலையை பாருங்க என்று கூறியதுடன் மூஞ்சிய மாத்துங்க, ரொம்ப கேவலமாக இருக்கிறது என்று மகத் மும்தாஜிடம் தெரிவித்தார்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

மகத், நீங்க பிக் பாஸ் சொல்லி மும்தாஜை டார்கெட் செய்கிறீர்களா, இல்லை நீங்களாக செய்கிறீர்களோ? அது உங்க இஷ்டம். ஆனால் தேவையில்லாமல் மும்தாஜை அசிங்கப்படுத்து உங்களின் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள். ஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் கொலவெறியில் உள்ளார்கள். இது தெரியாமல் அந்த பொண்ணு ஒரு பக்கம் ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஐஸுடன் சேர்ந்து கொண்டு மகத்தும் ஆட்டம் போடுகிறார்.

அப்புறம் என்ன?

அப்புறம் என்ன?

யாஷிகா தன் அருகே அமராமல் மும்தாஜ் பக்கத்தில் உட்கார்ந்ததை மகத்தால் ஜீரணிக்க முடியவில்லை. மும்தாஜை பற்றி அவ்வளவு பேசிவிட்டு அவர் பக்கத்திலேயே போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று மகத் யாஷிகாவுடன் சண்டை போட்டுவிட்டு இது தான் அந்த பொம்பளைக்கு வேண்டும் என்று மும்தாஜை திட்டினார். மகத் இவ்வளவு கேவலமாக மட்டுமே நடந்து கொள்ள முடியுமா, இல்லை இன்னும் இருக்கிறதா?. அது தான் யாஷிகாவுக்கும் உங்களுக்கும் இடையே ஒன்னும் இல்லை என்றீர்களே அதன் பிறகு அவர் யார் பக்கத்தில் உட்கார்ந்தால் உங்களுக்கு என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X