பிக் பாஸிடம் இருந்து 'அந்த' கெட்டப் பழக்கத்தை கற்றுக் கொண்ட மகத்

By Siva

Recommended Video

டேனி, மும்தாஜை கடித்து, டார்ச்சர் செய்த மஹத் - வீடியோ

சென்னை: பிக் பாஸிடம் இருந்து ஒரு கெட்டப் பழக்கத்தை கற்றுக் கொண்டுள்ளார் மகத்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவுக்கும், மகத்துக்கும் கோபப்படுவதற்கு காரணமே தேவையில்லை. சும்மா எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு காட்டு கத்து கத்துகிறார்கள்.

மும்தாஜ் சிரிப்பதை பார்த்துவிட்டால் அவர்களால் சும்மாவே இருக்க முடியாது.

யாஷிகா

யாஷிகா

எதற்கெடுத்தாலும் கோபப்படும் மகத்தை டாஸ்கின்போது வில்லனாக மாறிவிடுமாறு தூண்டிவிட்டுள்ளார் அவரின் புதிய காதலி யாஷிகா. ராஜமாதாவாக இருக்கும் மும்தாஜை எப்படி எல்லாம் கடுப்பேற்ற முடியும் என்று யோசிக்கிறார் மகத். டாஸ்கிற்காக தான் மும்தாஜை கடுப்பேற்றுவதாகவும் சப்பை கட்டு கட்டுகிறார் மகத்.

எண்ணெய்

எண்ணெய்

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் ஆனால் நீ வழக்கம் போன்று பேயாட்டம் ஆடாமல் அமைதியாக இரு என்று மகத் ஐஸ்வர்யாவிடம் கூறினார். அதன்படி மகத் தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்து ஐஸ்வர்யாவின் முகத்தில் ஊற்றினார். மகத் ஏற்கனவே சொல்லி வைத்ததால் ஐஸ்வர்யா மைக்கை கழற்றிவிட்டு ரெடியாக நின்றார். மகத் வந்து எண்ணெய்யை ஊற்றியதும் சிரித்துக் கொண்டே நின்றார். இதே வேறு யாராவது செய்திருந்தால் லூசு மாதிரி கத்தியிருப்பார்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியே ஸ்க்ரிப்ட்படி நடப்பதாக பார்வையாளர்கள் கூறி வருகிறார். இதில் மகத், யாஷிகா, ஐஸ்வர்யா சொல்லி வைத்து நடப்பதை பார்த்தால் ஸ்க்ரிப்டுக்குள் ஸ்க்ரிப்ட்டா அடங்கப்பா தாங்காதுப்பா என்றே சொல்லத் தோன்றுகிறது. அது சரி, பிக் பாஸ் மட்டும் தான் ஸ்க்ரிப்ட் கொடுக்கணும் என்று சட்டமா இருக்கு?. அவரை பார்த்து தான் மகத் கற்றுக் கொண்டிருக்கிறார் போன்று.

மும்தாஜ்

மும்தாஜ்

டாஸ்கின்போது மும்தாஜிடம் மோதினாலும் அவரின் உடல்நலப் பிரச்சனை குறித்து ஒரு முறை கூட குத்திக் காட்டியது இல்லை என்று மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்கிறார் மகத். நேற்று முன்தினம் தான் மும்தாஜின் கை ஸ்டிஃப்பாகிவிட்டதை அப்படி கிண்டல் செய்து ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தார். மகத் நீங்கள் சொல்லும் பொய்யை நம்ப யாரும் தயாராக இல்லை. கமல் கண்டிக்க மாட்டார், குறும்படம் போட மாட்டார் என்ற தைரியமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X