யாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்

By Siva

Recommended Video

சென்ட்ராயன் - ஐஸ்வர்யா போர் ஆரம்பம்- வீடியோ

சென்னை: பழையபடி மகத் யாஷிகாவுடன் சேர்ந்துவிட்டார்.

காதலி பிராச்சியை மிஸ் பண்ணுகிறேன் என்று அடிக்கடி கூறிக் கொண்டே பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகாவுடன் சேர்ந்து செம லூட்டி அடித்தார் மகத். இந்நிலையில் மகத் மீது காதல் வந்ததாக யாஷிகா கமலிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு யாஷிகாவிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார் மகத்.

மகத்

மகத்

சரி, மகத்துக்கு ரோஷம் வந்துவிட்டு இனி யாஷிகாவுடன் சேர்ந்து கொண்டு அட்டகாசம் பண்ண மாட்டார் என்று நினைத்தால் பிக் பாஸ் போன்றே அவரும் ஏமாற்றிவிட்டார். டாஸ்கில் எதிரணியில் இருக்கும் யாஷிகாவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார் மகத். யாஷிகாவுடன் பழையபடி இரு என்று மகத்துக்கு அறிவுரை வழங்கிய புண்ணியவதி பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நேற்று இரவு மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றுகூடி பேசினார்கள். மகத் யாஷிகாவின் பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தார். மூன்று பேரும் சேர்ந்து வீட்டில் உள்ளவர்கள் பற்றி புறம் பேசினார்கள். தனக்கு மும்தாஜ் ஆறுதல் கூறியதை குறை சொல்லியுள்ளார் யாஷிகா. அவர் வந்து என்னை மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறியதால் தான் ஃபீலிங் ஆகிவிட்டது என்று மும்தாஜ் மீது பழிபோட்டுவிட்டார் யாஷிகா. நாமினேஷன் நேரத்தில் தான் மும்தாஜுக்கு பாசம் எல்லாம் வருகிறது, எல்லாம் நடிப்பு என்கிறார் யாஷிகா.

மோசம்

மோசம்

மும்தாஜ் எது கொடுத்தாலும் சாப்பிடாதேம்மா என்று யாஷிகாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் மகத். மும்தாஜ் தண்ணீரில் எதையோ கலக்கி கொடுத்ததால் தான் யாஷிகா தன்னை காதலிப்பதாக கூறியது போன்று பேசுகிறார் மகத். டாஸ்கின் இடையே எப்பொழுது நேரம் கிடைத்தாலும் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கடலை போடுகிறார். டாஸ்க் என்று வந்துவிட்டால் அவர்களுடனேயே மோதுகிறார்.

பணம்

பணம்

பொம்மை தயாரிக்கத் தேவையான பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோது மகத் அணியின் பணத்தை திருட முயன்றார் யாஷிகா. இதை பார்த்த மகத் ஓடி வந்து யாஷிகாவை அலேக்காக தூக்கினார். இதை பார்த்த பார்வையாளர்களோ ஆரம்பிச்சுட்டான்யா, ஆரம்பிச்சுட்டான்யா என்றனர்.

விதிமுறை மீறல்

விதிமுறை மீறல்

பொம்மை டாஸ்கிற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும்போது ஐஸ்வர்யா தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று இருக்கிறார் பிக் பாஸ். அது என்னவோ, ஐஸ்வர்யா என்ன தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பது இல்லை என்ற ஒரு முடிவோடு இருக்கிறார் பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X