அப்பாடி, எதிர்பார்த்த மாதிரியே மகத் வெளியேற்றம்: முதல் முறையாக...
Recommended Video

சென்னை: அப்பாடி, அனைவரும் எதிர்பார்த்தது போன்றே மகத்தை வெளியேற்றிவிட்டார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் சொந்த புத்தி இல்லாமல் அந்த ஐஸ்வர்யாவும், புதுக் காதலி யாஷிகாவும் சொல்வதை எல்லாம் நம்பிக் கொண்டு ஓவராக ஆட்டம் போட்டார் மகத்.
சனிக்கிழமை பிக் பாஸ் மேடைக்கு வந்த கமல் மகத்தை தாளிச்சு எடுத்துவிட்டார்.

வெளியேற்றம்
மகத், தாடி பாலாஜி, மும்தாஜ், சென்றாயன் ஆகிய நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் மகத் தான் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் பார்வையாளர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களின் விருப்பத்தை ஒரு முறையாவது நிறைவேற்றி வைக்கலாம் என்று முடிவு செய்த பிக் பாஸ் மகத்தை வெளியேற்றிவிட்டார்.

கமல்
கமல் நேற்று வந்த வேகத்தில் வீண் பேச்சு வேண்டாம் என்று கூறி எலிமினேஷன் கார்டை காண்பித்தார். சிவப்பு நிறத்தில் இருந்த கார்டில் மகத்தின் பெயரை பார்த்ததும் அப்பாடா, கிளம்பிட்டான்யா என்று பார்வையாளர்கள் நிம்மதி அடைந்தனர். மகத் உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. பிக் பாஸ் வீட்டில் சுயபுத்தி இல்லாமல் நீங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தது பிடிக்காமல் போனதால் ஏற்பட்ட கடுப்பு.

யாஷிகா
மகத் தனது காதலை சொல்லிய சில நாட்களிலேயே இப்படி வெளியே அனுப்புகிறார்களே என்ற வருத்தம் யாஷிகாவுக்கு. சிவப்பு கார்டில் மகத்தின் பெயரை பார்த்ததும் யாஷிகாவின் முகம் பேய் அறைந்தது போன்று இருந்தது. கமல் தாளிச்சதை பார்த்ததும் நம்மை தான் அனுப்புவார்கள் என்பது மகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் முகத்தில் அதிர்ச்சி இல்லை.

ஜனனி
பிராச்சி மகத்துடனான காதலை முறித்துக் கொண்டது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. மகத் கிளம்புகிறார் என்றதும் ஜனனி வந்து அவரை கட்டிப்பிடித்து வெளியே போனதும் முதல் வேலையாக பிராச்சியை பார்த்து பேசு என்று அறிவுரை வழங்குகிறார். ஜனனி மகத்தை கட்டிப்பிடிப்பதை பார்த்து யாஷிகா கடுப்பானார். ஆனால் அவர் கடுப்பானதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றே கூற வேண்டும்.

சென்றாயன்
காதலன் கிளம்புவதை பார்த்து யாஷிகா அழுதார். அதை பார்த்த சென்றாயனோ அண்ணன் நான் இருக்கேன் என்று காமெடி செய்தார். தயவு செய்து போய் பிராச்சியுடன் பேசு என்று ரித்விகா மகத்துக்கு அறிவுரை செய்தார். மகத்தை யாஷிகாவிடம் இருந்து கடவுள் காப்பாற்றியதாக சக போட்டியாளர்கள் நினைப்பது அவர்களின் பேச்சில் இருந்து தெரிந்தது.


Click it and Unblock the Notifications











