மும்தாஜ் பற்றி அப்பவே சொன்ன மகத்: நாம் கேட்டோமா?
Recommended Video

சென்னை: மும்தாஜ் பற்றி மகத் சொன்னது போன்று தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தபோது மகத் அந்த யாஷிகா, ஐஸ்வர்யா பேச்சை கேட்டு ஆடியதால் அவர் மும்தாஜை பற்றி கூறியது பார்வையாளர்களின் காதில் ஏறவே இல்லை.
மகத் கோபத்தில் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இல்லை என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் சொன்னதில் உண்மை இருப்பது தற்போது புரிகிறது.

மும்தாஜ்
மும்தாஜை அந்த பொம்பள தப்பானவ என்று சொல்லியதால் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளாகி கமலால் தாளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் மகத். மும்தாஜுடன் மோதியபோது அவர் ஒரு டிராமா குயீன் என்று மகத் அடிக்கடி சொன்னார். ஆமா, நீங்க போடாத டிராமாவை தான் அந்தம்மா போட்டுவிட்டதா என்று பார்வையாளர்கள் மகத்தை எகத்தாளமாக பேசினார்கள்.
சரி
மும்தாஜ் ஒரு டிராமா குயீன் என்று மகத் கூறியது மிகச் சரி என்று பார்வையாளர்கள் தற்போது தெரிவித்து வருகிறார்கள். மேலும் மகத் இல்லாமல் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பார்க்க போரடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆமாம், மகத் இருந்த போது காதல், நட்பு, சண்டை என்று பல விஷயங்கள் நடந்தது. தற்போது அப்படி வகை வகையாக எதுவும் நடக்கவில்லையே.
புரியுது
பேட்டரி மாற்ற முடியவில்லை, என் கை ஸ்டிஃப்பாக உள்ளது என்று மும்தாஜ் மகத்திடம் கூறினார். அதை மகத் கிண்டல் செய்தபோது பார்வையாளர்களுக்கு அவர் மீது கோபம் வந்தது. ஆனால் தற்போதோ மகத் சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது, தக்காளி என்ன நடிப்பு என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். தன்னை பற்றி வரும் ட்வீட்டுகளை மகத் ரீட்வீட் செய்து வருகிறார்.
சுயநலவாதி
மகத் இருந்த வரைக்கும் மும்தாஜ் பொறுமையின் மறு உருவமாக இருந்தார். அமைதியாக இருந்து சிரித்து சிரித்தே மகத்துக்கு கோபம் வரவழைத்தார். ஆனால் தற்போதோ மும்தாஜ் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார், முரண்டு பிடிக்கிறார், முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறார். மகத் சொன்னது எல்லாம் தற்போது தான் பார்வையாளர்களுக்கு புரியத் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











