காதல் முறிந்தது தெரியாமல் மும்தாஜை அசிங்கப்படுத்தி கை கொட்டி சிரிக்கும் மகத்
Recommended Video

சென்னை: தன்னுடைய காதல் முறிந்துபோன விஷயம் தெரியாமல் மகத் மும்தாஜை அசிங்கப்படுத்துவதிலேயே குறியாக உள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத் தான் யாஷிகாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா மனமுடைந்து காதலை முறித்துவிட்டார்.
இது எல்லாம் தெரியாமல் மகத் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

டான்ஸ்
பிராச்சி காதலை முறித்துக் கொண்டது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் மகத் ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டும், புதுக் காதலி யாஷிகாவுடன் சேர்ந்து கடலை போட்டுக் கொண்டும், நேரம் கிடைக்கும் போது எல்லாம் மும்தாஜை அசிங்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். மும்தாஜ் தன்னிடம் வந்து உதவி கேட்டதை மற்றவர்களிடம் சொல்லி அவரை பற்றி கேவலமாக பேசி சிரித்தார் மகத்.

ஐஸ்வர்யா
மகத் மும்தாஜை பற்றி கேவலமாக பேசியதை கேட்டு ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஐஸ்வர்யா நடந்து கொள்வதை எல்லாம் பார்க்கும் பார்வையாளர்கள் அவருக்கு தமிழ் திரையுலகில் நிச்சயம் பெரிய இடம் எல்லாம் கிடைக்காது என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் கீழ்த்தரமாக நடந்து கொள்வதில் ஐஸ்வர்யாவை மகத் முந்திவிடுவார் போன்று.

நையாண்டி
என் கை ஸ்டிஃப்பாக உள்ளது, கொஞ்சம் பேட்டரியை மாற்றிக் கொடுக்க முடியுமா என்று மும்தாஜ் கேட்டதை நக்கலாக பேசி நடித்துக் காட்டினார் மகத். மகத் தனது காதலை ஒப்புக் கொண்டதும் யாஷிகா அவருக்கு ஓவராக ஜால்ரா அடிக்கிறார். ஐஸ்வர்யா திருந்தாத கேஸ் என்பது தெரிந்த விஷயமே. மகத் மும்தாஜை நேற்று ஓவராகவே கலாய்த்துவிட்டார்.

பிராச்சி
புதுக் காதலி கிடைத்த தெம்பில் இருக்கும் மகத்துக்கு பிராச்சி பிரிந்து சென்றது பற்றி எப்பொழுது தெரிய வருமோ?. மகத் மும்தாஜிடம் நடந்து கொள்வது மிகவும் கீழ்த்தரமாக உள்ளது என்று பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல பிராச்சிக்கும் அப்படியே தான் தோன்றியுள்ளது. என்ன நடந்தாலும் சரி, நான் கண்டிக்கவே மாட்டேனே என்ற ஒரு முடிவோடு இருக்கும் கமலிடம் இது குறித்து புகார் தெரிவித்தாலும் பலனில்லை. ஏற்கனவே கமல் வாராவாரம் மும்தாஜை டார்கெட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கெட்டவர்
மும்தாஜ் நல்லவரா, கெட்டவரா என்ற விவாதத்திற்கு வரவில்லை. ஒரு பெண்ணிடம், சீனியர் நடிகையிடம் மகத் இப்படித் தான் நடந்து கொள்வதா? அவருக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சனைகளை குத்திக் காட்டி கிண்டல் செய்கிறார் மகத். மகத் நீங்கள் மும்தாஜுக்கு செய்வதை நிச்சயம் உங்களுக்கு யாராவது திருப்பி செய்வார்கள். அது தான் கர்மா.


Click it and Unblock the Notifications











