கருணாநிதி குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது: மகத் உருக்கம்

By Siva

Recommended Video

மஹத் காதலி மிஸ் இந்தியாவா?! கலக்கத்தில் யாஷிகா...வீடியோ

சென்னை: கருணாநிதியின் குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது என்று மகத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை போட்டு வைத்திருந்தனர். புகைப்படத்திற்கு முன்பு போட்டியாளர்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய மகத் கூறியதாவது

கலைஞர் தாத்தா

கலைஞர் தாத்தா

தமிழ் கடவுளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வணக்கம். தாத்தா, கலைஞர் தாத்தா, டாக்டர், தலைவர், கலைஞர் கருணாநிதி. அவரை நான் என்றுமே தாத்தா என்று தான் நினைத்திருக்கிறேன். என் நண்பர் தயாநிதி அழகிரி என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தாத்தாவை பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறான். தாத்தாவை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறான்.

சினிமா

சினிமா

தாத்தா 14 வயதிலேயே அரசியலுக்கு வந்து, கலையுலகிற்கு வந்தவர். சினிமாவையும், அரசியலையும் சப்போர்ட் செய்து, தமிழுக்காக போராடியவர். பள்ளிக்கே செல்லாத ஒரு மேதாவி. இன்று அவரை போன்று எழுத ஆளில்லை. நான்கு தலைமுறையை பார்த்திருக்கிறார், அதைவிட பெரிய சாதனை இருக்காது. அவரை போன்ற ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டில் திருப்பி இருப்பாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவர் வரலாறு படைத்துவிட்டு சென்றுள்ளார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த தலைமுறையில் நாமும் இருக்கிறோம் என்பதில் ரொம்ப பெருமைப்படுகிறேன். அந்த குடும்பத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்பதற்கு நான் கொடுத்து வைத்தவன் என்றே சொல்ல வேண்டும். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அவர் இறந்தது ரொம்ப கஷ்டமான விஷயமாக இருக்கிறது. அந்த குடும்பத்தால் தமிழ்நாட்டில் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்திருக்கு என்று மகத் உருக்கமாக தெரிவித்தார்.

பாலாஜி

பாலாஜி

இன்று தமிழ் நம்முடன் இல்லை. தமிழ் என்று சொன்னாலே நமக்கு அவர் நினைவு தான் வரும். அவர் இருந்த கால கட்டத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் நிறைய உழைத்துவிட்டார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் அவரை அழைத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார் தாடி பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X