நேற்று மகத்-யாஷிகா பேசியதை கேட்டால் காரித் துப்புவது போல் இருக்கு பாஸ்

By Siva

Recommended Video

மகத்-யாஷிகா பேசியதை கேட்டால் முகம் சுளிக்க வைக்குது- வீடியோ

சென்னை: தன்னை காதலிப்பதாக கமலிடம் கூறிய யாஷிகா ஏன் தனக்கு ஒரு காதலர் இருக்கும் விஷயத்தை கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மகத்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகா மகத் மீது காதல் வந்ததாக கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். மேலும் மகத்திற்கு தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதால் அதை மதிப்பதாகவும் கூறினார்.

மகத் கமல் முன்பு நெளிந்ததை பார்த்தால் யாஷிகாவையும் பிடித்துள்ளது, பிராச்சியையும் பிடித்துள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது போன்று இருந்தார். இதை பார்த்த கமல் இருதலைக்கொள்ளி எறும்பு போன்று இரண்டு பக்கமும் சுடுகிறது என்றார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

யாஷிகா அப்படி பேசியதால் நான் கெட்டவன் போன்று ஆகிவிட்டது என்று மகத் ஐஸ்வர்யாவிடம் புலம்பினார். எல்லாத்தையும் இறைவன் பார்த்துப்பான் என்று கூறி பெருமூச்சுவிட்டார் மகத். மேலும் யாஷிகாவுக்கு காதலர் இருப்பது யாருக்கும் தெரியவே தெரியாதோ என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். காதலை சொன்னவர் தனக்கு காதலர் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். இருப்பினும் ஒரு பெண்ணாக அவர் தனது உணர்வை வெளிப்படுத்தியதற்காக அவரை மதிக்கிறேன் என்று ஐஸ்வர்யா கூறினார்.

வைஷ்ணவி

வைஷ்ணவி

வெளியே காதலன் இருந்தும் மகத் மீது காதல் ஏற்பட்டதை துணிந்து சொல்ல தனி தைரியம் வேண்டும், எனக்கெல்லாம் இல்லை என்று வைஷ்ணவி யாஷிகாவிடம் கூறினார். வெளியே போனால் காதலன் கேட்பான் என்று தெரிந்தும் சொன்ன பார், அது பெரிய விஷயம். ஒருத்தரின் பெயர் என்னால் கெடக் கூடாது என்று நினைத்து தான் கமல் சாரிடம் உண்மையை கூறினேன் என்றார் யாஷிகா. பார்த்தால் அப்படி தெரியலேயேம்மா...

யாஷிகா

யாஷிகா

மகத்திடம் அவருக்கு ஆதரவாக பேசிய ஐஸ்வர்யாவோ, யாஷிகா மற்றவர்களிடம் கூறியதை கேட்டுவிட்டு அவரிடம் போட்டுக் கொடுத்தார். உன் பெயரை காப்பாத்த தான் யாஷிகா கமல் சாரிடம் அப்படி சொன்னாராம் என்று போட்டுக் கொடுத்தார் ஐஸ்வர்யா. உனக்கு காதலன் இருக்கிறார், எனக்கு காதலி இருக்கிறார் நமக்கு இடையேயானது மியூச்சுவலானது என்ற மகத்திடம் உன் பெயரை காப்பாத்த தான் அப்படி சொன்னேன் என்றார் யாஷிகா.

கேவலம்

கேவலம்

காதலி இருக்கிறார், காதலன் இருக்கிறார் என்று தெரிந்தும் கோடிக் கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் லூட்டி அடித்துவிட்டு அதை ஒப்புக் கொண்டதை பார்க்க ரொம்ப கேவலமாக இருக்கிறது. இதில் உண்மையை ஒப்புக் கொண்டதற்காக ஒரு சப்பைக் கட்டு பொய் பிளஸ் பெருமை வேற. மகத், யாஷிகா இடையேயான என்னவோ உறவை பார்க்கும்போது கேவலமான விஷயத்தையும் பெருமையாக ஒரு நிகழ்ச்சியில் காட்டியிருக்கிறார்களே என்று நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X