'அந்த வலி'யை விவரிக்க முடியாது: மகத் கண்ணீர்

By Siva

Recommended Video

மஹத் பேச்சில் மாற்றம், யார் காரணம் ?- வீடியோ

சென்னை: அந்த வலியை விவரிக்க முடியாது என்று மகத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தபோது யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரின் பேச்சை கேட்டு ஆட்டம் போட்டதால் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார் மகத். இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் அவர் வலி, வேதனை பற்றி பேசியுள்ளார்.

அழுகை

நான் வெளியே சென்ற பிறகு உங்களின் அம்மா, அப்பா வந்ததை பார்த்துபோது எனக்கு கண்ணில் தண்ணீர் வந்தது. ஏன்டா நீ அழுகிற என்று என் அம்மாவும், அக்காவும் கேட்டார்கள். உள்ளே இருக்கிற வலி உங்களுக்கு தெரியாது என்றேன். அந்த வலியை யாருக்கும் விவரிக்க முடியாது என்று கூறி மகத் கண் கலங்கிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் 24 மணிநேரமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை எடிட் செய்து பார்வையாளர்களுக்கு காட்டுகிறார்கள். எடிட் செய்யாமல் காட்டினால் நீங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைவீர்கள். அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே பிரச்சனை உள்ளது என்று முன்னாள் போட்டியாளர்கள் தெரிவித்த நிலையில் மகத்தும் வலி பற்றி பேசியுள்ளார்.

மும்தாஜ்

மும்தாஜ்

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது யார் வீட்டில் இருந்து ஆள் வந்தாலும் மும்தாஜ் அழுவார். ஆட்கள் வந்தால் மட்டும் அல்ல சக போட்டியாளர்களுக்கு ஒன்று என்றாலும் மும்தாஜ் அழுதார். என்ன இந்தம்மா சும்மா பொசுக்கு பொசுக்குன்னு அழுகிறது என்று முதலில் விமர்சனம் எழுந்தது. அது அன்பால், மற்றவர்களின் வலியை புரிந்து கொண்டதால் வந்த கண்ணீர் என்பது பின்பு தான் புரிந்தது.

கஷ்டம்

கஷ்டம்

வெளியுலக தொடர்பே இல்லாமல் நமக்கு பிடிக்காதவர்களுடன் ஒரு வீட்டில் 105 நாட்கள் இருப்பது என்பது மிகவும் கஷ்டம். நெகட்டிவ் எனர்ஜி அதிகம் இருக்கும் இடத்தில் தங்கி இருப்பது ரொம்பவே கொடுமை. பணம், புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த இடத்தில் வலியை அனுபவிக்கும் போது கண்ணீர் வரத் தான் செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X