விஜய்க்கு போட்டியா அரசியலில் குதிக்கப் போறாரா மாகாபா ஆனந்த்?.. அது இது எது பங்கமான ப்ரோமோ!
சென்னை: நடிகர்கள் திடீரென அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், அதை ட்ரோல் செய்யும் விதமாக 'அது இது எது' 3வது சீசனின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. தமிழில் மற்ற முன்னணி சேனல்களை விட ரசிகர்களை அதிகம் என்டர்டெயின் செய்யும் சேனலாகவும், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஏற்றுமதி செய்யும் சேனலாகவும் விஜய் டிவி விளங்கி வருகிறது.
ஆரம்பத்தில் 'அது இது எது' முதல் சீசனை நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்தார். அந்த சீசன் இன்று வரையில் ரசிகர்களால் மறக்க முடியாத சீசனாக உள்ளது. 2009ல் ஆரம்பமான அந்த சீசன் பல ஞாயிற்றுக்கிழமைகள் வெற்றிகரமாக அரங்கேறி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

சிரிச்சா போச்சு, மாத்தியோசி உள்ளிட்ட பல சுற்றுகள் ரசிகர்களையும் அதில் பங்கேற்கும் பிரபலங்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடும்.
ஹீரோவான சிவகார்த்திகேயன்: விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் அப்படியே 3, மெரினா படங்களில் நடிக்க ஆரம்பித்து மரங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என நடித்துக் கொண்டிருந்தார். தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் மற்றும் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவே சிவகார்த்திகேயன் மாறிவிட்டார்.
மாகாபா ஆனந்த்: விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் விலகிய நிலையில், மாகாபா ஆனந்த் 2017 முதல் 'அது இது எது' நிகழ்ச்சியின் சீசன் 2வை தொகுத்து வழங்கி வந்தார். மேலும், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடங்கி பல ரியாலிட்டி ஷோக்களை பிரியங்கா உள்ளிட்டோருடன் இணைந்து நடத்தி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
வெடித்த பஞ்சாயத்து: லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ட்ரோல் செய்யும் விதமாக 'அது இது எது' நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட காமெடி நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த சீசன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பல வருடங்கள் கழித்து மீண்டும் 'அது இது எது' நிகழ்ச்சியின் சீசன் 3ஐ மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க போகிறார்.

அரசியல் கட்சி ட்ரோல்: ஏற்கனவே விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியே விஜய்யின் போக்கிரி படத்தை கலாய்த்து வெளியான பேக்கிரி படத்தின் வீடியோவால் தான் நின்று போனது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகையை ட்ரோல் செய்யும் விதமாகவும் சமீப காலமாக நடிகர்கள் பிரஸ் மீட் வைத்து அரசியல் கட்சிகளை ஆரம்பிப்பதை ட்ரோல் செய்யும் விதமாக உருவாகி உள்ள ப்ரோமோ வித்தியாசமாகவும் டிரெண்டாகவும் உள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அது இது எது சீசன் 3: பத்திரிகையாளர்கள் என்ன அரசியல் கட்சி என கேட்க, அய்யய்யோ இது அரசியல் கட்சி பிரஸ் மீட் இல்ல பாஸ் 'அது இது எது' சீசன் 3 பிரஸ் மீட் என அலறியடித்து பேசும் காட்சிகள் வேறலெவல் ரகளை. வெகு விரைவில் இந்த சீசன் 3 தொடங்கவுள்ள நிலையில், அடுத்த ஃபன் காத்திருக்கிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











