புருஷன் முன்னாடியே மனைவி தோள் மேல கை போட்டு.. ஒரு நாள் வான்னு கூப்பிடுறான்.. மாகாபா ஆனந்த் கோபம்!
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் உள்ளிட்டோர் குடித்து விட்டு தன்னைத் தாக்கியதாக வாட்டர்மெலான் திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்துக்கு வந்து தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்த மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசியது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பற்றி தவறாக பேசியும் அவர்களை ட்ரோல் செய்தார் என திவாகர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், வழக்கம் போல சர்ச்சை ஆசாமிகளையே தேடி ஓடி அவர்களுக்கு பிக் பாஸ் வாய்ப்புக் கொடுத்து விஜய் டிவி பிரபலங்களாக மாற்றும் வேலையை கடந்த சீசனிலும் செய்தது.

பிக் பாஸ் வீட்டிலேயே மேல் சட்டை, உள் பனியன் என எதையும் அணியாமல் பெண்கள் இருக்கும் இடத்தில் ரொம்பவே ஆபாசமாக நடந்துக் கொண்ட வாட்டர் மெலான் திவாகர் அண்டாகாகசம் நிகழ்ச்சியிலும் பெண் போட்டியாளர்களிடம் ஆபாசமாக பேசினார் என மாகாபா ஆனந்த் குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
தமிழ் புத்தாண்டுக்கு ஸ்டேஷனில்: தமிழ் புத்தாண்டு அதுவுமா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என தலையில் எழுதியிருக்கு, அதுதான் இங்கே இருக்கிறேன் என கோபத்தில் கொந்தளித்த மாகாபா ஆனந்த், ஒரு நாள் தான் 17 மணி நேரம் நின்று வேலை பார்க்கிறேன். குடித்து விட்டு யாராவது இப்படி நின்னு வேலை பார்க்க முடியுமா? வாட்டர்மெலான் திவாகர் சொல்வது எல்லாமே பொய் சார் என பத்திரிகையாளர்களிடம் பொங்கித் தள்ளிவிட்டார்.
புருஷன் முன்னாடியே பொண்டாட்டி மேல: அண்டாகாகசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரியல் நடிகைகளிடம் ஆபாசமாக பேசியதாக விஜய் டிவி நிர்வாகம் தான் அவரை தடை செய்து வெளியே அனுப்பியது. அவன் என்னவோ நான் அவனை வேலை விட்டு அனுப்பியது போல பிரச்னை பண்றான். புருஷன் முன்னாடியே பொண்டாட்டி மேல கை போட்டு, இவ்வளவு நாள் புருஷன் கூட இருந்தியே, ஒரு நாள் என்கூட வரியான்னு சொல்றான், இதெல்லாம் காமெடியா, இந்த கருமம் புடிச்சவனை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என விளாசித் தள்ளிவிட்டார்.
திவாகருக்கு பொறாமை: கானா வினோத் மற்றும் புகழ் இருவரும் மாகாபா ஆனந்த் உடன் காவல் நிலையத்துக்கு வந்திருந்த நிலையில், நாங்க யாருமே குடிச்சிட்டு அடிக்கல, தொழில் செய்யுற இடத்துக்கு யாராவது குடிச்சிட்டு போவாங்களா, திவாகருக்கு எங்க மேல பொறாமை, எப்படியாவது நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடணும்னு இப்படி பண்றான் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











