Priyanka: VJ பிரியங்கா கல்யாணத்திற்கு வராத நபர்.. யார் அந்த முக்கியஸ்தர் தெரியுமா?
சென்னை: தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது காதலர் DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிரியங்காவின் அம்மா ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகளும் வெளியாகின. இவரது திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரது நெருங்கிய நணபர் மட்டும் வரவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்பதை நெட்டிசன்கள் கேள்வியாக கேட்டு நச்சரிக்கின்றனராம்.
விஜே பிரியங்கா 2009இல் ஜீ தமிழ் சேனலில் திஸ் சிர்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்ப்ளக்ட் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சன் டிவியில் சேர்ந்து நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதனைத்தொடர்ந்து திரை பிரபலங்களையும் பேட்டி எடு்த்தும் வந்தார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் அடைந்தார். இதன் மூலம் தமிழகம் முழுக்க இசை ரசிகர்களின் பிடித்த தொகுப்பாளினியாக மாறினார் பிரியங்கா.

மாகாபா ஆனந்த் - பிரியங்கா காம்போ: மாகாபா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். ஒரு இசை நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கமெண்ட் அடிக்கும் காட்சிகள் ரகளையாகவும் ரசிக்கும் படி இருந்தன. எதிரதிர் அணியாக இருப்பதும் பின்னர் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் என பார்க்கவே கலர்புல்லான நிகழ்ச்சியாக இருந்தது. இதைத்தொடர்ந்து நடுவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் பிரியங்கா பாடி அசத்தினார். இசை நிகழ்ச்சியை தாண்டி மாகாபா ஆனந்தும் பிரியங்காவும் நண்பர்களாக இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இருவரும் இணைந்து விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ஹிட் ஃபேராக இருந்துள்ளனர்.
மாகாபா ஆனந்த் எங்கே?: இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே தனது காதலரான டிஜே வசியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் திருமண அறிவிப்பால் சின்னத்திரை பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தியாக மாறியது. இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், விஜய் டிவி பிரபலங்கள் அமீர், பாவ்னி, நிரூப், அசார், மதுமிதா உள்ளிட்டோர் பிரியங்காவின் திருமணத்தில் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலானது. ஆனால், பிரியங்காவின் திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பரான மாகாபா ஆனந்த் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மாகாபா அவரது திருமணத்தில் இருக்கும் புகைப்படம் இல்லாததால் இவர் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பிரியங்காவின் 2ஆவது திருமணத்திற்கு வாழ்த்து செய்திகள் குவிந்து வந்தாலும் ஒரு பக்கம் சர்ச்சைகளும் வெடித்துள்ளன. முதல் கணவரை ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் அவசர திருமணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், திருமணம் தொடர்பான புகைப்படத்தை தொடர்ந்து பிரியங்கா அமைதியாக மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில்,இவரது திருமணத்தில் மாகாபா ஆனந்த் கலந்துகொள்ளாததும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. மேலும், மாகாபாவிற்கு முக்கியமான வேலைகள் இருந்ததால் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒன்றாக ஒரு சேனலில் பணியாற்றுகின்றனர். திருமணத்தில் பங்கேற்காதது வருத்தம் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











