மக்கள் டிவியில் களை கட்டும் 'விளையாடு வாகை சூடு'

By Mayura Akilan

Makkal TV- Velayadu Vaakai soodu
தொலைக்காட்சிகளில் கேம் ஷோ என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எந்த சேனலை திருப்பினாலும் யாராவது ஒருவர் பந்து பொருக்கி போடுகிறார். வளையலை கையில் கோர்க்கிறார். பாட்டிலில் தண்ணீர் பிடித்து ஊற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுக்க எல்லா மொழி சேனல்களிலும் கேம் ஷோ நிகழ்ச்சிகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. தமிழ்நாட்டிலும் கூட நிறைய தமிழ் சேனல்களில் கேம் ஷோக்கள் நடத்தப்படுகின்றன. (புத்திசாலித்தனமான போட்டிகள் எதுவுமில்லை).

இந்த பந்தயத்தில் மக்கள் தொலைக்காட்சியும் பங்கெடுத்துக் கொண்டுள்ளது. 'விளையாடு வாகை சூடு' என்ற கேம் ஷோவில் ஒரு நிமிட போட்டிகள் வைக்கின்றனர். போட்டியில் அவர்கள் கூறுவதை 1 நிமிடத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

அரங்கில் மட்டுமல்லாது விஜிபி யுனிவர்சல் கிங்டம், அபிராமி மெகாமால் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கு சென்று அங்கே மக்களை நேரடியாக சந்தித்து போட்டியில் பங்கேற்கச் செய்கின்றனர். கடந்த வாரங்களில் மீன் தொட்டியில் பிளாஸ்டிக் மீனை போட்டு தூண்டிலில் பிடிக்க வைத்தார்கள். அதிக மீன் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.

விளையாட்டை விட நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளினியின் கொஞ்சல் பேச்சிற்காகவே ஒருமுறை பாருங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X