Malar serial: கண் கிறங்கி.. காதல் பெருக்கெடுத்து.. வாயை விட்ட கதிர்.. அப்படியே மயங்கிய மலர்!

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் வித்தியாசமான கதை, வில்லங்கமான கல்யாணம் என்று கதையும் கொஞ்சம் புதிதுதான். பார்க்கவும் நன்றாக இருக்கிறது. மலர் கதிர் இருவரின் நடிப்பும் பிரமாதமாக இருக்கிறது.

கதிர் என்கிற கதிரேசன் காவல் துறை துணை ஆணையராக இருக்கிறான். இவன் அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர்கள் வீட்டில் படு ஸ்டிரிக்ட். எப்டீன்னா ராணுவ அதிகாரியின் தங்கை மக்கள், தனது பையன் கதிரேசனை விரும்பியும் சொந்தத்தில் கல்யாணம் பண்ண கூடாதுன்னு அசலில் பொண்ணு பார்க்கிறார்னா பாருங்களேன்.,.

கதிருக்கு அசலில் பொண்ணு பார்க்கலாம்னு பார்த்தால் மலர் என்கிற பெண்ணை பேசி முடிக்கிறார்கள். மலர் தற்காப்புக்கு ஒரு கொலை செய்துவிடுகிறாள். இது அவளின் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும்.

கதிர் மலர்

கதிர் மலர்

மலரை பொண்ணு பார்த்த உடனே கதிருக்கு பிடிச்சுப் போகுது. கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு இவன் சொல்லிவிட்டு போய்விட, மலர் வீட்டிலும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடறாங்க. மலர் தனது தங்கை சுவாதியிடம் மட்டும் ப்யந்து பயந்து என்ன நடக்கப் போகுதோன்னு புலம்பறா. இந்த கல்யாணம் நடக்க கூடாது சுவாதின்னும் சொல்றா. தங்கைதான் அக்காவைத் தேற்றி கல்யாணத்துக்கு அவளை தயார் படுத்தறா.

அவ்வளவு லவ்வு

அவ்வளவு லவ்வு

கதிருக்கு மலர் மேல லவ்வுன்னா லவ்வு அவ்வளவு லவ்வு.வேலையில் இருக்கும்போது மலர் நினைவு வந்துட்டால் காலையில் மலர் எழுவதற்கு முன் அவளது வீட்டுக்கு போயி அவள் பெட்ரூமில் தேவுடு காத்த கதை கூட உண்டு. கட்டிப் பிடிச்சு இருக்கான், முத்தம் கொடுத்து இருக்கான். ஆனால், இதில் எதிலும் மலர் பட்டும் படாமல் இருப்பதோடு பயத்திலும் தவிக்கிறாள். நிச்சயதார்த்தம் ஆனதில் இருந்து மலர் வாயிலிருந்து ஒரு ஐ லவ் யூ வராதான்னு ஏங்கித் தவிக்கிறான்.

சுவாதி மலர்

சுவாதி மலர்

கல்யாணத்துக்கு முதல் நாள் இந்த உண்மையை சொல்லிட போறேன் சுவாதின்னு மலர் சொன்னாலும், சுவாதி வேண்டாம் அக்கா.. தெரியும்போது பார்த்துக்கலாம். மாமா உன்னை எப்படியும் காப்பாத்திடுவார். இது தற்காப்புக்காக செய்த கொலைதானேக்கா... மாமாவுக்கு தெரியும்.. பயப்படாதே அக்கான்னு சொல்றா. இப்படி சமாதானப்படுத்தி இப்போது கல்யாணம் வரை வந்திருக்கு.

மலருக்கு மூட்

மலருக்கு மூட்

ஒரு வழியா முதலிரவு நேரத்தில் மலருக்கு கதிர் மீது காதல் வந்துருது. அவனிடம் வியக்கும்படி ரசிக்கும்படி மகிழும்படி ஐ லவ் யூ சொல்லலலாம்னு அவள் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, வந்து காதல் மொழி பேசுகிறான். சந்தோஷமா இருக்கியா மலர்னு கேட்கறான். பின் பக்கமாக அவளை அனைத்து கழுத்தில் முத்தமிடுகிறான்.

ஆனால் பாருங்க.. பய புள்ள முதலிரவில் டியூட்டி ஞாபகத்திலேயே இருந்திருப்பான் போல, நீ வந்த நேரம் எனக்கு ஒரு கேஸ் வந்திருக்கு மலர். அதுவும் மர்டர் கேஸ்னு சொல்லி அதோட விடாமல், லேப்டாப்பை எடுத்து, அந்த கொலையாளியை பார்க்கவும் வச்சுடறான். அப்பறம் என்ன,வியர்த்து விறுவிறுத்து அவள் நிற்க, இவன் ரொமான்சில் ஈடுபட்டு, உதட்டில் முத்தம் கொடுக்கப்போக, அந்த புள்ள மயங்கிருச்சு.

அட போங்கடா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X