Malar serial: அடடா..கமிஷனர் வீட்டு பையனையே மலர்.. என்னத்த சொல்ல?
சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலருக்கு வரும் பிரச்சனைகளை என்னவென்று சொல்வது? ஒரு சின்ன பெண்.... அவ்ளுக்குள் புதைந்து கிடக்கும் ரகசியம்... அதை எத்தனை நாட்கள் பொத்தி வைக்க முடியும்?
மலர் தற்காப்புக்காக கவுசிக் என்பவனை கொலை செய்துவிடுகிறாள். இது அவளின் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த நிலையில், மலருக்கு அசிஸ்டென்ட் கமிஷனர் கதிரேசனுக்கு திருமணம் பேசி முடிக்கிறார்கள்.
திருமணமும் நல்ல படியாக முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் மலருக்கு வரும் சோதனைகள் இருக்கிறதே...உண்மையில் பாவம் மலர்.ஆனால், இவளுக்கு கிடைத்து இருக்கும் தங்கச்சி சுவாதி கொடுக்கும் தைரியம் சூப்பர்.

காதல் மலருக்குள்
கதிர் மலரை பெண் பார்த்தத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்து விடுகிறான். காதல்னா காதல் அப்படி ஒரு காதல். எப்போதும் மலரின் நினைவிலேயே மூழ்கித் திளைக்கும் அளவுக்கு காதல்.இதே காதல் மலருக்குள்ளும் தன் மீது வர வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால், மலர் எப்போதும் இந்த கல்யாணம் நின்று விடாதா,அதுவும் அஸிஸ்டென்ட் கமிஷனரை கல்யாணம் செய்து கொள்ளும் தான் ஒரு கொலைக் குற்றவாளி ஆச்சே என்று நினைக்கிறாள்.

தங்கை சுவாதி
அக்கா பயப்படாம இருக்கா..மாமா அசிஸ்டெண்ட் கமிஷனர்.தற்காப்புக்குக்காக நீ செய்த கொலை இது.அது தெரிய வரும்போது மாமா உன்னை சட்டப்படி காப்பாத்துவார் அக்கான்னு சொல்லி கல்யாணம் வரை கொண்டு வந்துவிட்டாள்.தங்கை கிடைத்தால் இப்படி ஒரு தங்கை கிடைக்க வேண்டும் எனும் அளவுக்கு சுவாதியின் தங்கை கதாபாத்திரத்தை அமைத்து இருக்கிறார்கள்.

காதல் பூத்தது
முதலிரவு அறைக்குள்போகும் போதே தங்கை சுவாதி அக்கா பயப்படாதே.மாமா ஆசையா கேட்கும் அந்த ஐ லவ் யூ வார்த்தையை இப்போதாவது சொல்லிடுக்கான்னு கெஞ்சிட்டு போகிறாள்.இவளும் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறாள்.அறைக்குள் நுழைந்த கதிர் மலரை அருகில் உட்கார வச்சு, அவளின் முகத்தை கைகளில் ஏந்தி, கண்ணோடு கண் பார்த்து முத்தமிட்டு எல்லாம் நன்றாகப்போய்க்கொண்டு இருந்த சமயத்தில்தான் கதிர் அதை சொல்லிட்டான். அதாவது கவுசிக்னு ஒருத்தன் கொலை செய்யப்பட கேஸ் எனக்கு வந்திருக்கு. நீ வந்த அதிர்ஷ்டம் மலர்னு..அப்புறமென்ன பயத்தில் மயங்கி விழுந்துட்டா மலர்.

கமிஷனர் மகனா
கமிஷனர் விருந்துக்கு கூப்பிடறார்னு மலரை அழைச்சுக்கிட்டு போறான் கதிர். மாமியார் மலருக்கு கதிர் தனக்கு முதன்முதலாக வாங்கி வந்த வளையலை மலருக்கு பரிசுக தர்றாங்க. இதை பார்க்கும்போது உனக்கு கதிரோட சந்தோசம் நினைவுக்கு வரணும் மலர். இந்த குடும்ப சந்தோஷமே நீயும் ,கதிரும் சந்தோஷமா வாழறதைப்பார்க்கரத்தில்தான் இருக்குன்னு சொல்றாங்க. சரி இனிமேல் கதிர் சந்தோஷத்தை மட்டும் நினைச்சு வாழ்வோம்ன்னு கமிஷனர் வீட்டு விருந்துக்கு போனா,அங்கே விருந்தெல்லாம் முடிஞ்சு, சும்மா ஒரு அறையை கிராஸ் பண்றா மலர்.
அங்கே கவுசிக் படம் மாட்டி இருக்கு.அவள் பயத்தில் அறைக்குள் போக, அறை முழுக்க அவள் கொலை செய்த கவுசிக் புகைப்படங்கள். பயத்தில் வியர்வையில் நனைந்து இருக்கும் மலர் எப்படி சமாளிக்கப் போகிறாள்?


Click it and Unblock the Notifications











